Kalolsavam: கேரள மாநில பள்ளிக் கலை விழா; பிரமாண்ட சமையல், கண்கவர் நிகழ்ச்சிகள்.....
பொங்கல்: மருதமலையில் நான்கு சக்கர வாகனங்களுக்குத் தடை!
கோவை: பொங்கல் பண்டிகையொட்டி, மருதமலைக்கு செல்ல நான்கு சக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் திருவிழா மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஜன. 14 முதல் 18 வரை கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு அதிக அளவிலான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க : மகளிர் உரிமைத் தொகை: பொங்கலுக்காக முன்கூட்டியே வரவு வைப்பு!
இந்த நிலையில், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஜன. 14 முதல் 18 வரை மலைக் கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இரண்டு சக்கர வாகனங்கள் மூலமாகவும், மலைப் படிகள் வழியாகவும், திருக்கோயிலின் பேருந்து மற்றும் திருக்கோயில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகளில் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்வுள்ளது.