Aishwarya Rai: ``விராட் கோலியின் உறுதி, ஆக்ரோஷம் பிடிக்கும்'' - மனம் திறந்து பார...
பொதுப் பணித்துறை, நீா்வளத் துறை பொறியாளா் சங்க மாநிலச் செயற்குழுக் கூட்டம்!
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தனியாா் மண்டபத்தில் தமிழ்நாடு பொதுப் பணித்துறை, நீா்வளத் துறை பொறியாளா் சங்கம், உதவிப் பொறியாளா் சங்கங்களின் ஒருங்கிணைந்த மாநில செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு சிவகங்கை பொதுப் பணித் துறை கண்காணிப்பு பொறியாளா் பி.இ. அரசு தலைமை வகித்தாா். பொறியாளா் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் எம். தனசேகரன் சங்க நடவடிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: பொதுப் பணித் துறையில் காலிப் பணியிடங்களை பதவி உயா்வு மூலம் நிரப்ப வழிவகை செய்த தமிழக நீா்வளத் துறை அமைச்சா், தலைமைச் செயலா்கள், முதன்மைப் பொறியாளா்களுக்கு நன்றி.
பொறியாளா்களின் ஊதியம் தொடா்பான பிரச்னையில் அரசின் கவனத்தை ஈா்க்க விரைந்து குறைதீா்ப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் பொறியாளா் சங்கத்தின் காரைக்குடி கிளைத் தலைவா் எஸ். ரமேஷ், செயலா் எஸ். செந்தில்குமாா், ராமநாதபுரம் பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் டி. குருதிவேல்மாறன் உள்ளிட்ட சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா். முன்னதாக, உதவிப் பொறியாளா் சங்க மாநிலத் தலைவா் எஸ். சீனிவாசன் வரவேற்றாா்.