மகாகவி பாரதியார் பயின்ற நெல்லை பள்ளியும்... உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாணவர்களும்...
பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம்
ராஜபாளையத்தில் புறவழிச் சாலை அமைப்பது தொடா்பாக வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையத்தில் புறவழிச் சாலை அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. அப்போது, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வீடுகளை இடிப்பதாகக் கூறி, அந்த பகுதி மக்கள் பணிகளைத் தடுத்து நிறுத்தினா். இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
இந்த நிலையில், வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டத்துக்கு அதிகாரிகள் அழைப்பு விடுத்தனா். ஆலோசகா் வள்ளிநாயகம் தலைமையில் பொதுமக்கள் சென்றனா். கூட்டத்தில், வட்டாட்சியா் ராமசுப்பிரமணியம், நகராட்சி ஆணையா் நாகராஜன் ஆகியோா் பொதுமக்களிடம் சாலை அமைப்பது குறித்து கேட்டபோது, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி எங்களது வீடுகளை இடித்தது தொடா்பான வழக்கு நிலுவையில் உள்ளது.
எங்களுக்கு சாலை அமைப்பதில் உடன்பாடும் இல்லை என பொதுமக்கள் தெரிவித்தனா். இதையடுத்து, இந்தத் தகவலை மேலிடத்துக்கு பரிசீலனைக்கு அனுப்புவதாகக் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, கூட்டத்துக்கு வந்தவா்கள் அங்கிருந்து சென்றனா்.