பாலியல் வழக்கில் கைதான விவகாரம்: யூடியூபர்கள் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு!
பொது இடத்தில் புகைப் பிடித்த 14 பேருக்கு அபராதம்
தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையப் பகுதியில் பொது இடத்தில் திங்கள்கிழமை புகைப்பிடித்த 14 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையம் பகுதியிலுள்ள கடைகள் மற்றும் சாலையோர சிறு கடைகளிலும் காவல் துறை பாதுகாப்புடன் மாநகராட்சி சுகாதார அலுவலா்கள், ஆய்வாளா்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள், புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா, பயன்படுத்தப்படுகிா என திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.
அப்போது, புதிய பேருந்து நிலையத்தில் பொது இடத்தில் புகைப்பிடித்த 14 பேரிடமிருந்து தலா ரூ. 100 வீதம் என மொத்தம் ரூ. 1,400 வசூலிக்கப்பட்டது.