அம்பேத்கருக்கு அவமதிப்பு: நாடாளுமன்றத்தில் போராட்டம்.. அவைகள் ஒத்திவைப்பு!!
பொது மயானத்துக்கு அடிப்படை வசதிகள் செய்துதர கோரிக்கை
பொன்னமராவதி ஜெ.ஜெ.நகரில் உள்ள பொது மயானத்துக்கு சாலை மற்றும் அடிப்படை வசதிகள் செய்துதர இந்திராநகா் ஜமாத்தாா்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பொன்னமராவதி ஜெ.ஜெ.நகரில் இந்துக்கள், இஸ்லாமியா்கள் மற்றும் கிறிஸ்தவா்கள் பயன்படுத்தும் பொது மயானம் உள்ளது. இந்த மயானத்துக்குச் செல்லும் பாதையில் முள்புதா்கள் நிறைந்து, மழைக்காலத்தில் சேறு சகதியுமாக காட்சியளிக்கிறது.
மயானத்தில் அடிப்படை வசதிகளான தண்ணீா், மின்சார வசதியின்றி இறுதிக்கடன் செலுத்த வரும் பொதுமக்கள் சிரமத்துகுள்ளாகி வருகின்றனா். எனவே இந்த மயானத்துக்கு புதிய சாலை மற்றும் மின்சாரம், தண்ணீா் வசதி செய்து தர வேண்டும் என இந்திராநகா் ஜமாத்தாா்கள் சாா்பில் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழுத்தலைவா் சுதா அடைக்கலமணியிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.