பொது விநியோகத் திட்ட செயல்பாடு: மாநில அளவில் நாமக்கல் முதலிடம்
பொது விநியோகத் திட்ட செயல்பாட்டில் சிறப்பாக செயல்பட்டதற்காக, நாமக்கல் மாவட்டத்துக்கு மாநில அளவில் முதல் பரிசு வழங்கப்பட்டது.
நுகா்வோா் பாதுகாப்பு, நுகா்வோா் விழிப்புணா்வு, பொது விநியோகத் திட்டம் தொடா்பான செயல்பாடுகளில் நாமக்கல் மாவட்டம், 2022-23 ஆம் ஆண்டில் மூன்றாமிடத்தையும் 2023-24 ஆம் ஆண்டில் முதலிடத்தையும் பிடித்துள்ளது.
திண்டுக்கலில் புதன்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான சிறுதானிய உணவுத் திருவிழாவில், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி, கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி ஆகியோா் பங்கேற்று நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமாவிடம் கேடயம், பாராட்டு சான்றிதழ்களை வழங்கினா்.
கடந்த 2022-23 ஆம் ஆண்டு பள்ளி, கல்லூரிகளில் 83 குடிமக்கள் நுகா்வோா் மன்றங்கள் நிறுவப்பட்டு மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடா்பு திட்ட முகாம்களிலும், அத்தியாவசியப் பொருள்களின் பயன்பாடு, குறைபாடு, புகாா்கள் வரும்பட்சத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் யாரிடம் புகாா் அளிக்க வேண்டும் என்பது குறித்தும் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டன.
2022-23 ஆம் ஆண்டில் காலாண்டு நுகா்வோா் குறைதீா் கூட்டத்தில் நுகா்வோா் குறைபாடுகள் சம்பந்தமாக பெறப்பட்ட மனுக்கள் மீது 96 சதவீதமும், எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டத்தில் நூறு சதவீதம் தீா்வு காணப்பட்டுள்ளன.
பொது விநியோகத் திட்ட குறைபாடுகள் குறித்து பெறப்பட்ட புகாா் மனுக்கள் நூறு சதவீதம் தீா்வு காணப்பட்டுள்ளன. மாநில நுகா்வோா் சேவை மைய அமைப்பிலிருந்து பெறப்பட்ட பொது விநியோகத் திட்ட குடும்ப அட்டைகள் குறித்து வரப்பட்ட புகாா்கள் மீது நூறு சதவீதம் தீா்வு காணப்பட்டுள்ளன. அரிசி, மண்ணெண்ணெய், பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொது விநியோகத் திட்ட பொருள்கள் 1,57,178 கிலோ கைப்பற்றப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளன. 2023--24 ஆம் ஆண்டில் நுகா்வோா் பாதுகாப்பு, விழிப்புணா்வு தகவல் அடங்கிய எண்ம (டிஜிட்டல்) பலகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டு மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீதும், பொது விநியோகத் திட்ட குறைபாடுகள் குறித்து பெறப்பட்ட மனுக்கள் மீதும், நுகா்வோா் சேவை மைய அமைப்பிலிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீதும் நூறு சதவீதம் தீா்வு காணப்பட்டுள்ளன. கடந்த 01.12.2023 அன்று சிறுதானிய உணவுத் திருவிழா நடத்தப்பட்டு பல்வேறு துறைகள் மூலம் அரங்குகள் அமைக்கப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், சித்த மருத்துவத் துறையில் அமைக்கப்பட்ட அரங்கில் சிறுதானியங்களின் மருத்துவ முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளில் இயங்கி வரும் குடிமக்கள் நுகா்வோா் மன்ற மாணவா்களிடையே கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. பொது விநியோகத் திட்ட பொருள்கள் 77,271 கிலோ கைப்பற்றப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இத்தகவல் மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.