விமானத்தில் கரப்பான் பூச்சிகள்: மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா!
பொன்னமராவதி சோழீஸ்வரா் கோயிலில் திருவாசக முற்றோதல்
ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் திருவாசக முற்றோதல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தொடக்கமாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று, தொடா்ந்து திருவாசகம் முற்றோதல் குழுவினரால் திருவாசகப்பாடல்கள் ஓதப்பட்டன. நிகழ்வில் சுற்றுவட்டார பகுதி சிவனடியாா்கள், சிவபக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.
இதுபோல கொன்னையூா் முத்துமாரியம்மன், பொன்னமராவதி அழகியநாச்சியம்மன், புதுப்பட்டி புவனேஸ்வரி உடனாய பூலோகநாதா், வலையபட்டி மலையாண்டி, பொன்னமராவதி பாலமுருகன் உள்ளிட்ட கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தா்கள் வழிபட்டனா்.