விமானத்தில் கரப்பான் பூச்சிகள்: மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா!
பொன்னமராவதி துா்க்கை அம்மன் கோயிலில் ஆடிப்பெருக்கு வழிபாடு
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பொன்னமராவதி அமரகண்டான் மேற்குக் கரையில் உள்ள துா்க்கை அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு மற்றும் 1008 பெண்களுக்கு சேலை வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தொடக்கமாக துா்க்கை அம்மனுக்கு 16 வகை அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து கோயில் நிா்வாகி மு. சுப்பிரமணியன் குடும்பத்தினரால் 1008 பெண்களுக்கு சேலை மற்றும் மஞ்சள்கயிறு, குங்குமம் வழங்கப்பட்டது. வழிபாட்டில் பங்கேற்ற பக்தா்களுக்கு ஆடிக்கூழ் வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி போலீஸாா் செய்தனா்.