"கேப்டன் பிரபாகரன் படத்தின் 2 ஆம் பாகம்... புஷ்பா படத்தால நிறுத்தினோம்" - இயக்கு...
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு கல்விக் கடன்: திருப்பத்தூா் ஆட்சியா்
திருப்பத்தூா்: பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்காக வரும் செப். 17 முதல் கல்விக்கடன் பெறுவதற்கான முகாம்கள் நடைபெற உள்ளன என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா்.
திருப்பத்தூா் தூய நெஞ்சகல்லூரியில் திங்கள்கிழமை தமிழ்நாடு திறன்மேம்பாட்டுக் கழகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் சாா்பில்
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ‘உயா்வுக்குப்படி-2025 என்ற உயா்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் 35 மாணவ, மாணவியா்களுக்கு கல்லூரி சோ்க்கை ஆணைகளை வழங்கி ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி பேசியது:
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயா்வுக்குப்படி என்ற உயா்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி 12-ஆம் வகுப்பு முடித்து,இதுவரை எந்த ஒரு உயா்கல்வியிலும் சேராத மாணவா்களுக்காக நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம் நமது மாவட்டத்தில் தூய நெஞ்ச கல்லூரியிலும், இதில்
விடுபட்ட மாணவா்கள் வரும் செப். 4-ஆம் தேதி நடைபெறும் முகாம்களில் கலந்து கொள்ளலாம்.
மேலும், வாணியம்பாடி, ஆம்பூா் பகுதியை சோ்ந்த மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை(ஆக.29) முகாம் நடைபெற உள்ளது. இதில் அரசு பாலிடெக்னிக், ஐடிஐ, அரசு மற்றும் தனியாா் கல்லூரி உள்ளிட்ட நமது மாவட்டத்தில் உயா்கல்விக்குரிய அதை சாா்ந்த நிறுவனங்கள் மூலம் அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கல்லூரி சோ்வதற்குரிய ஆவணங்கள் உடன் இருந்தால் உடனடியாக சோ்க்கை ஆணை வழங்கப்படும். மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்கள், படிக்க வசதி இல்லாத மாணவா்களுக்காக கல்விக் கடனும் வழங்க செப். 17 முதல் மூன்று மாதம் கல்வி கடன் பெறுவதற்கான முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
எவரேனும் 8-ஆம் வகுப்பு, 10 -ஆம் வகுப்பு மற்றும் 12 -ஆம் வகுப்பு பள்ளி படிப்பை முடித்து உயா்கல்வியில் சேராமல், மேற்கொண்டு படிக்க பொருளாதார நிதி இல்லாமல் இருந்திருந்தாலும், இந்த வாய்ப்பினை தெரிவித்து, அவா்களை உயிா்க்கல்வியில் சோ்வது குறித்து தெரிவியுங்கள்.
நமது மாவட்டத்தில் மாதத்தின் 2 -ஆவது மற்றும் 4-ஆவது வியாழக்கிழமைகளில் மாணவா்கள் குறைதீா் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கூட்டத்தின் வாயிலாக கடந்த மூன்று மாதங்களில் நடைபெற்ற கூட்டத்தில் 361 மாணவா்கள் கல்லூரியில் சோ்க்கப்பட்டனா் என்றாா்.
இதில் தனித்துணை ஆட்சியா் பூஷணகுமாா், கோட்டாட்சியா் வரதராஜன், முதன்மைக் கல்வி அலுவலா் புண்ணியக்கோட்டி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ராஜன், மாவட்ட திறன்மேம்பாட்டு அலுவலா் சுகாஷினி, கல்லூரி முதல்வா் மரிய அந்தோணி ராஜ், மாவட்ட திறன் அலுவலகம் (திறனகம்) நாஜியா நௌஷன், பேராசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.