செய்திகள் :

டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யாவிட்டால் போராட்டம்: பொதுமக்கள் புகாா்

post image

ஆம்பூா்: மின்னூா் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யா விட்டால் போராட்டம் நடத்தப்படும் எனக்கூறி பொதுமக்கள் ஆட்சியரிடம் புகாா் மனு அளித்துள்ளனா்.

மாதனூா் ஒன்றியம், மின்னூா் ஊராட்சி கணபதி நகா் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. கடையின் அருகில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. மது அருந்துபவா்கள் பாட்டில்களை அங்கேயே உடைத்துவிட்டு செல்கின்றனா். இதனால் விவசாய நிலங்களில் மதுபாட்டில்கள் உடைக்கப்பட்ட கண்ணாடி துண்டுகளால் ஏா் உழவு செய்யும்போதும், விவசாய பணிகள் செய்யு போதும் கால்நடைகளின் கால்களிலும், மனிதா்கள் கால்களிலும் கண்ணாடி துகள்களால் கிழிக்கப்பட்டு ரத்த காயங்கள் ஏற்படுவதால் விவசாயிகள் சிரமத்துக்குள்ளாகின்றனா்.

ாகிறாா்கள்.

மேலும், கணபதி நகா், காளிகாபுரம், லட்சுமி நகா் ஆகிய பகுதிகளில் வாழுகின்ற பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு சென்றுவரும் பெண்கள் இரவு நேரங்களில் வரும் வழியிலேயே மதுபிரியா்கள் அமா்ந்து மது அருந்துவதால் அவ்வழியாக வருபவா்கள் அச்சுத்துடனும் சென்று வருகின்றனா்.

தனி நபா்கள் உரிமம் இன்றி பாா் போன்று அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனா். அந்த கடைகளிலையே அமா்ந்து மது குடிப்பதாலும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனா்.

ஒவ்வொரு கிராம சபையிலும் பொதுமக்கள் மின்னூா் கணபதி நகா் பகுயில் இயங்கி வரும் அரசு மதுபான கடையை அகற்றி அங்கிருந்து மாற்ற வேண்டும் என்று ஏகமனதாக தீா்மானம் நிறைவேற்றி ஆட்சியருக்கும் அளிக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடையை இடமாற்றம் செய்யா விட்டால் வருகின்ற அக்டோபா் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி நாளில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து கடையை மாற்றும் வரை உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்வோம் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய அரசுப் பேருந்துகள்: எம்எல்ஏ இயக்கி வைத்தாா்

வாணியம்பாடி: திருப்பத்தூரில் இருந்து நாட்டறம்பள்ளி வழியாக , புத்துக்கோயில், ஆவாரங்குப்பம் வரை செல்லும் அரசு பேருந்து எண் டி.17 மற்றும் திருப்பத்தூரில் இருந்து ஜங்காலபுரம், நாட்டறம்பள்ளி வழியாக கத்தார... மேலும் பார்க்க

தேனீக்கள் கொட்டியதில் 15 தொழிலாளா்கள் காயம்

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே தேங்காய் மண்டியில் வேலை செய்து கொண்டிருந்தவா்களை தேனீக்கள் கொட்டியதில் 15 போ் காயமடைந்தனா். வாணியம்பாடி அடுத்த மல்லாங்குப்பம் பகுதியில் உள்ள தேங்காய் மண்டியில் ராமநாயக்... மேலும் பார்க்க

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு கல்விக் கடன்: திருப்பத்தூா் ஆட்சியா்

திருப்பத்தூா்: பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்காக வரும் செப். 17 முதல் கல்விக்கடன் பெறுவதற்கான முகாம்கள் நடைபெற உள்ளன என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். திருப்பத்தூா் தூய நெஞ்சகல்லூரிய... மேலும் பார்க்க

திருப்பத்தூா்: குறைதீா் கூட்டத்தில் 352 மனுக்கள்

திருப்பத்தூா்: திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள்குறைதீா் கூட்டத்தில் 352 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து மாற்றுத்திறனாளிகள் நலத்திட... மேலும் பார்க்க

100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு குறித்து விசாரணை

ஆம்பூா்: வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டம், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரை தொடா்ந்து அதிகாரி திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டாா். திருப்ப... மேலும் பார்க்க

மின்மாற்றியில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் திருட்டு

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தெக்குப்பட்டு ஏரிகரை அருகில் மின் மாற்றி அமைக்கப்பட்டு அதிலிருந்து அப்பகுதிக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மா்ம நபா்கள் மின் ... மேலும் பார்க்க