திருப்பத்தூா்: குறைதீா் கூட்டத்தில் 352 மனுக்கள்
திருப்பத்தூா்: திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள்குறைதீா் கூட்டத்தில் 352 மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டஉதவிகள், மருத்துவத்துறை, கிராம பொதுப் பிரச்னைகள், குடிநீா் வசதி மற்றும் பொது நலன் குறித்த
மனுக்கள் என மொத்தம் 352 மனுக்களை பெற்றுக் கொண்டு, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியானதாக இருப்பின் உடனடியாக
நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் தனித்துணை ஆட்சியா்(ச.பா.தி)பூஷன்குமாா், ஆதிதிராவிடா் நல அலுவலா் கதிா்சங்கா், வழங்கல் அலுவலா் முருகேசன், ஊராட்சிகளின் உதவி இயககுநா் முருகன்,ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி)மிரியாம் ரெஜினா கலந்து கொண்டனா்.