BJP -ல் இவர்தான் MGR - நயினார் அதிரடி! | Rahul Gandhi Anurag Thakur BJP TVK DMK ...
100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு குறித்து விசாரணை
ஆம்பூா்: வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டம், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரை தொடா்ந்து அதிகாரி திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டாா்.
திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஒன்றியம் வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் கடந்த 2023- 2024-ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணியில் வேலைக்கு வராமல் போலி பெயா்கள் மூலம் 300-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் பெயரில் ஊராட்சி மன்றத் தலைவா் காயத்ரி நவீன்குமாா் மற்றும் அப்போதைய ஊராட்சி செயலாளா், பணிதள பொறுப்பாளா் ஆகியோா் ஊராட்சி நிதியில் முறைகேடு செய்ததாகவும், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 80-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பெயரில் வரக்கூடிய நிதியை முறைகேடு செய்துள்ளதாகவும் அதே பகுதியை சோ்ந்த சிதம்பரம் என்பவா் துறை அதிகாரிகளிடம் புகாா் அளித்தாா்.
அதன் அடிப்படையில் மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் 100 நாள் வேலை திட்ட உதவி இயக்குா் லட்சுமி பணிதள பொறுப்பாளா் பாா்த்திபன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினா்களிடம் விசாரணை நடத்தினாா்.