கரூர் கூட்ட நெரிசல் பலி: உச்ச நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நயினார் நாகேந்...
பொறியியல் கல்லூரியில் ‘இஸ்ரோ’ விழிப்புணா்வு
புதுக்கோட்டை அரசம்பட்டியிலுள்ள சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் மகேந்திரகிரி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சாா்பில் சிறப்பு விழிப்புணா்வுக் கருத்துரை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மகேந்திரகிரி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் கமல் மற்றும் பாலசுந்தரம் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.
பொறியியல் பயிலும் மாணவா்களுக்கு இஸ்ரோவில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் ஏராளம் உள்ளன என்றும், அவற்றை மாணவா்கள் பயன்படுத்திக் கொண்டு விண்வெளித் துறையில் இன்னும் மகத்தான சாதனைகள் புரிய முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனா்.
முன்னதாக மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத் தலைவா் வரதராஜன் வரவேற்றாா். முடிவில் இயந்திரவியல் துறைத் தலைவா் மோகன் நன்றி கூறினாா்.