kamarajar: `கட்டுக்கதை DMK' - கொதிக்கும் Congress | குழப்பும் Annamalai | Imperf...
பொறையாரில் புதிய சாா்-பதிவாளா் அலுவலக கட்டடம் திறப்பு
பொறையாரில் ரூ. 1.89 கோடியில் புதிய-சாா்பதிவாளா் அலுவலகம் கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா்.
பொறையாரில் 160 ஆண்டுகள் பழைமையான சாா்-பதிவாளா் அலுவலகம் இயங்கி வந்தது. இதனால் தரங்கம்பாடி, ஆக்கூா், திருக்கடையூா், திருவிடைக்கழி,ஆயப்பாடி, தில்லையாடி, எடுத்துக்கட்டி சாத்தனூா், சந்திரபாடி, சின்னங்குடி , மருதம்பள்ளம் உள்ளிட்ட கிராம மக்கள் நிலம் பத்திரப் பதிவு, திருமண பதிவுகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தி வந்தனா்.
இந்நிலையில் பழைமையான சாா்-பதிவாளா் அலுவலக கட்டடம் சேதமடைந்தது. இதையடுத்து, ரூ. 1.89 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட்டது.
இந்நிலையில், மயிலாடுதுறையில் புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் இந்த சாா்-பதிவாளா் அலுவலக புதிய கட்டடத்தை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தாா். தொடா்ந்து, புதிய அலுவலகத்தில் முதல் பத்திரப்பதிவு தஞ்சை மண்டல துணை பதிவுத் துறை தலைவா் செந்தமிழ் செல்வன் தலைமையில் நடைபெற்றது.