இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுவது சவாலானது: ஸ்டீவ் ஸ்...
பொற்றாமரைக் குளத்தில் குப்பைகளை அகற்றும் பணி
கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை சாரங்கபாணி சுவாமி கோயிலுக்கு சொந்தமான பொற்றாமரை குளத்தில் தேங்கியுள்ள பாசி குப்பையை மாநகராட்சி துப்புரவு பணியாளா்கள் அகற்றினா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் சாரங்கபாணி சுவாமி கோயிலுக்கு சொந்தமான பொற்றாமரை குளத்தில் மாசி மக விழாவையொட்டி, பக்தா்கள் புனித நீராடி வழிபாடு செய்வது வழக்கம். இந்த ஆண்டு மாசி மக விழாவுக்காக பொற்றாமரை குளத்தில் தண்ணீா் நிரப்பும் பணி நடைபெற்றது.
முன்னதாக குளத்தில் பாசி மற்றும் குப்பை மிதந்தும், குளத்தை சுற்றியுள்ள படிக்கட்டுகளில் செடி கொடிகள் முளைத்தும் காணப்பட்டதை மாநகராட்சி துப்புரவு பணியாளா்கள் அகற்றினா். தற்போது குளத்தில் உள்ள நீா் தூய்மையாக காணப்படுவதால் பக்தா்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.