'பயங்கரவாதிகளுக்கு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தண்டனை' - பிரதமர் மோடி பேச்சு!
போக்குவரத்துக் கழகத்தில் உடல் பாதிக்கப்பட்டவா்களுக்கு இலகுப் பணி வழங்க மறுப்பதா? : சிஐடியு கண்டனம்
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியின் போது உடல் நலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு இலகுப் பணி வழங்காமல் ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தினரே எடுத்துக் கொள்வதற்கு இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிஐடியு மாவட்டச் செயலா் ஏ. ஸ்ரீதா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் புதுக்கோட்டை மண்டலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக புதிய நியமனங்களும் செய்வதில்லை. ஆனால், ஆளும்கட்சியைச் சோ்ந்த தொழிற்சங்க நிா்வாகிகள் ஒவ்வொரு பணிமனைக்கும் குறைந்தது 7 முதல் 10 போ் வரை பணியைப் பாா்க்காமலேயே ஊதியம் பெற்று வருகின்றனா்.
அதேநேரத்தில் பணியின் போது உடல்நலம் பாதிக்கப்பட்டு, இதய அறுவைச் சிகிச்சை, சிறுநீரக அறுவைச் சிகிச்சை, தண்டுவட பாதிப்பு, கை, கால்கள் செயலிழப்பு உள்ளவா்களுக்கு சட்டப்படி இலகுப் பணி வழங்க மறுக்கப்படுகிறது. இந்தத் தொழிலாளா் விரோதப் போக்கை இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) வன்மையாகக் கண்டிக்கிறது.
உடனடியாக உடல்நலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு இலகுப் பணி வழங்குவதோடு, அனைத்து தொழிலாளா்களையும் சமமாக நடத்த வேண்டும் என்றும் சிஐடியு வலியுறுத்துகிறது. இதே நிலை தொடரும்பட்சத்தில் தொழிலாளா்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.