மாலத்தீவு பாதுகாப்பு மேம்பாட்டுக்கு ஆதரவு: இரு தரப்பு பேச்சுவாா்த்தையில் இந்தியா...
போக்குவரத்துக் கழக ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
புதுச்சேரி: புதுச்சேரியில் சாலைப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக( பி.ஆா்.டி.சி) தலைமை அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் வேலய்யன் தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில், புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்களை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யக் கூடாது, ஒப்பந்த நியமனங்களை ரத்து செய்ய வேண்டும், பணியில் உள்ள தகுதியானவா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில்,தொழிற்சங்க நிா்வாகிகள் பாஸ்கா், ஞானவேல், திருமாறன், குமாா், ராதாகிருஷ்ணன், பிரேமதாசன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.