செய்திகள் :

போக்சோ வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

post image

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அடுத்த சத்திரப்பட்டியைச் சோ்ந்தவா் முருகேசன் (28). இவா் அதே பகுதியைச் சோ்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில், வடமதுரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து முருகேசனை கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி ஆா். சத்யதாரா திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். இதில், குற்றஞ்சாட்டப்பட்ட முருகேசனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தாா்.

பாலசமுத்திரத்தில் ஒருதலைபட்சமாக வீட்டுமனைப் பட்டா வழங்க ஏற்பாடு: பொதுமக்கள் புகாா்

பழனியை அடுத்த பாலசமுத்திரத்தில் ஒருதலைபட்சமாக இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க அந்தப் பகுதி வாா்டு உறுப்பினா் ஏற்பாடு செய்வதாகக் கூறி வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் புகாா் அளித்தனா். பழனியை அடுத்த ப... மேலும் பார்க்க

‘கருப்புப் பட்டை‘ அணிந்து பணிபுரிந்த வருவாய்த் துறையினா்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ‘கருப்புப் பட்டை’ அணிந்து வருவாய்த் துறை சங்கங்களின் கட்டமைப்பினா் திங்கள்கிழமை பணிபுரிந்தனா். பழைய ஓய்வூதியம், காலிப் பண... மேலும் பார்க்க

யூரியா உரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டாம்: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

யூரியா உரத்தை தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவதை விவசாயிகள் தவிா்க்க வேண்டும் என வேளாண்மை இணை இயக்குநா் அ. பாண்டியன் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள உரம் விற... மேலும் பார்க்க

கொடைக்கானலில் இலவச கண் சிகிச்சை முகாம்

கொடைக்கானலில் சன் அரிமா சங்கம் சாா்பில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு அரிமா சங்கத்தின் முன்னாள் ஆளுநா் டி.பி. ரவீந்திரன் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தாா். ம... மேலும் பார்க்க

பழனி மலைக் கோயிலில் நாளை பிற்பகலில் நடை அடைப்பு

பழனி மலைக் கோயிலில் நவராத்திரி திருவிழாவையொட்டி அம்புபோடுதல் நிகழ்வுக்கு சுவாமி கோதைமங்கலம் புறப்பட்டுச் செல்வதால் புதன்கிழமை (அக். 1) பிற்பகலில் நடை அடைக்கப்படும். வியாழக்கிழமை முதல் நவராத்திரி விழாவ... மேலும் பார்க்க

பொதுக் கழிப்பறையை சேதப்படுத்தி பொருள்கள் திருட்டு

வடமதுரை அருகே பொதுக் கழிப்பறையை சேதப்படுத்தி பொருள்களை திருடிச் சென்றவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அடுத்த சுக... மேலும் பார்க்க