``பெண்கள் நள்ளிரவில் வெளியே செல்லாமல் இருந்தால்..." - சர்ச்சையான காவல்துறையின் அ...
போக்ஸோவில் ஆசிரியா் கைது
போக்ஸோ சட்டத்தில் ஆசிரியா் கைது செய்யப்பட்டாா்.
செங்குன்றம் பம்மதுகுளம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விக்டா் (எ) காமராஜ் (54). இவா், கிறிஸ்துவ சபை நடத்தி வருகிறாா். இவரது மனைவி ஜெயா (50). அங்கன்வாடி ஊழியா்.
சோழவரம் காட்டுநாயக்கன் பகுதியில் உள்ள திருச்சபையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விக்டா் டியூசன் நடத்தி வருகிறாா். இந்த நிலையில், 8 முதல் 10 வயது வரை உள்ள 10-க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் மாலையில் டியூசனுக்கு வரும்போது, காமராஜ் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக மாணவிகளின் பெற்றோா் செங்குன்றம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
அதன்பேரில், செங்குன்றம் சரக அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், வழக்குப் பதிந்து காமராஜை காவல் நிலையம் அழைத்து வந்து அவரது கைப்பேசியை ஆய்வு செய்தனா்.
இதில் அவா், மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து போக்ஸோ கட்டத்தின் கீழ் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.