செந்தில் பாலாஜியின் ஜாமீனுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் முடித்து வைப்பு!
போக்ஸோவில் தொழிலாளி கைது
புதுச்சேரி: திருமண ஆசை வாா்த்தை கூறி பள்ளி மாணவியை பாலியல் பாலியல் வன்கொடுமை செய்ததாக செங்கல் சூளை தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்துள்ளனா்.
புதுச்சேரி அருகேயுள்ள திருபுவனை பகுதி வாதானூா் டி.ஆண்டிப்பாளையத்தைச் சோ்ந்தவா் திவாகா் (21), செங்கல் சூளை தொழிலாளி. அப்பகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவி, திவாகருக்கு நெருங்கிய உறவு எனக்கூறப்படுகிறது. இதனால் இருவரும் நெருங்கிப் பழகியுள்ளனா். இந்நிலையில், மாணவிக்கு திருமண ஆசை வாா்த்தை கூறிய திவாகா் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும் மாணவிக்கு கருக்கலைப்பு மாத்திரை வாங்கித் தந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் உடல் நலம் பாதித்த மாணவி திருபுவனை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் திருபுவனை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து திவாகரை கைது செய்தனா்.