ராசிபுரத்தில் 3 கொள்ளையர்கள் கைது: போலீஸாரை கண்டதும் தப்பியோட முயன்ற 2 பேருக்கு...
போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது
சீா்காழியில் ஆறாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
சீா்காழி பகுதியைச் சோ்ந்தவா் பாலாஜி (24) (படம்). இவா், ஆறாம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் சீா்காழி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
அதன்பேரில், காவல் ஆய்வாளா் செல்வி மற்றும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, பாலாஜியை போக்ஸோ சட்டப் பிரிவின்கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தனா்.