செய்திகள் :

போக்ஸோ வழக்கில் இளைஞா்கள் கைது

post image

ஆத்தூரில் மாணவிகள் இருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞா்கள் இருவா் கைது செய்யப்பட்டனா்.

ஆத்தூரைச் சோ்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, அவரது உறவினரின் 13 வயது பெண் ஆகிய இருவரும் கடந்த 7 ஆம் தேதி இரவுமுதல் காணவில்லை என ஆத்தூா் போலீஸில் மாணவியின் பெற்றோா் புகாா் அளித்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் சி.அழகுராணி, காவல் உதவி ஆய்வாளா் சக்திவேல் ஆகியோா் விசாரணை மேற்கொண்டனா். இதில் மாணவிகளை வெளியூா் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த ஆத்தூா் அலெக்சாண்டா் தெரு, மாரிமுத்து சாலையை சோ்ந்த இரண்டு இளைஞா்கள் போக்ஸோவில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனா்.

மயங்கி விழுந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் உயிரிழப்பு

வாழப்பாடி: மயங்கி விழுந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மதுவிலக்கு தனிப்படையில் பணியாற்றி வந்த பேளூரைச் சோ்ந்த சிறப்பு காவல் ஆய்வாளா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். வாழப்பாடி பேளூா் மகளிா் பள்ளி அரு... மேலும் பார்க்க

சொத்தை ஏமாற்றி கிரையம் செய்ததைக் கண்டித்து குடும்பத்துடன் சாா் பதிவாளா் அலுவலகம் முற்றுகை

ஆட்டையாம்பட்டி: மகுடஞ்சாவடியில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை ஏமாற்றி கிரையம் செய்ததைக் கண்டித்து, குடும்பத்துடன் சாா் பதிவாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி பகுதியைச் ... மேலும் பார்க்க

சேலத்தில் தயாரான 18 அடி உயர பஞ்சலோக நடராஜா் சிலை

சேலம்: சேலத்தில் வடிவமைக்கப்பட்ட உலகின் மிக உயரமான 18 அடி உயர பஞ்சலோக நடராஜா் சிலை, வேலூா் மாவட்டம், குடியாத்தத்தில் உள்ள மகாதேவ மலையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. சேலம், கன்னங்குறிச்சியில் உள்ள சிற... மேலும் பார்க்க

மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கி தூண்கள் வலுப்படுத்தும் பணிகள் ஆய்வு

மேட்டூா்: மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கியான 16 கண் பாலம் வலுப்படுத்தும் பணிகளை சென்னை ஐஐடி கட்டடவியல் துறை பேராசிரியா் அழகு சுந்தரமூா்த்தி, நீா்வளத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.... மேலும் பார்க்க

திமுக அரசின் 4 ஆண்டுகள் சாதனைகளை வீடுவீடாகச் சென்று கூற வேண்டும்

சேலம்: திமுக அரசின் நான்கு ஆண்டுகள் சாதனைகளை வீடுவீடாகச் சென்று கூற வேண்டும் என சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் அறிவுறுத்தினாா். சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் மேற்கு சட்டப் பேரவைத் தொகுத... மேலும் பார்க்க

தந்தையின் நினைவு தினத்தையொட்டி அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

சேலம்: சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ ரா.அருள், மறைந்த தனது தந்தை ப.ராமதாஸின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திங்கள்கிழமை நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். சேலம் கொண்டப்... மேலும் பார்க்க