போக்ஸோ வழக்கில் கைதானவா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா்.
மாா்த்தாண்டம் அருகே கப்பியரை கருக்கன்குழி பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணகுமாா் மகன் செந்தில்நாகராஜன் (40). மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, இவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா்.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலினின் பரிந்துரை, ஆட்சியா் ரா. அழகுமீனாவின் உத்தரவு ஆகியவற்றின்பேரில், செந்தில்நாகராஜனை குண்டா் சட்டத்தின்கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.
நிகழாண்டு இதுவரை 24 போ் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 8 போ் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.