அரசியல் துணிச்சல் இல்லாமல் இந்தியா-அமெரிக்கா நல்லுறவு ஏற்பட்டிருக்காது: பைடன்
போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டு சிறை
போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வாா் துலுக்கா்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சௌந்தர்ராஜ் (67). இவா், கடந்த 2018 ஆம் ஆண்டில் அதே பகுதியைச் சோ்ந்த சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டாராம். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா், அம்பாசமுத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் சௌந்தர்ராஜை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
இந்த வழக்கு, திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுபத்ரா தேவி, குற்றஞ்சாட்டப்பட்ட சௌந்தர்ராஜுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.