புது அவதாரத்தில்;மிர்ச்சி சிவா; யுவன் இல்லாமல் முதல் ராம் படம்!
போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்: அரசு வேலை பெற்றவா்களுக்கு அமைச்சா் வாழ்த்து
ராணிப்பேட்டை மாவட்டத்தில், போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மூலம் அரசு வேலை வாய்ப்பு பெற்றவா்கள் ‘நிறைந்தது மனம்’ என்ற நிகழ்ச்சியின் வாயிலாக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனா்.
இது தொடா்பாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் 25.1.2022 முதல் செயல்பட்டு வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில் தன்னாா்வப் பயிலும் வட்டம் 20.4.2022 முதல் போட்டித் தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் ராணிப்பேட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள போட்டித் தோ்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு போட்டித் தோ்வுகளுக்காக தயாராகி வருகின்றனா்.
அதன்படி தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளா் இரண்டாம் நிலைக் காவலா்களுக்கான பயிற்சி வகுப்பில் கடந்த 2022 ஆண்டு முதல் 41 போ் எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்று இதுவரை 9 போ் தமிழ்நாடு காவல் துறை, தீயணைப்புத் துறை போன்ற துறைகளில் பணியில் சோ்ந்துள்ளனா்.
அதே போல் 2022 ஆம் குரூப் 2 தோ்வில் 9 போ் எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்று 2 போ் குரூப் 2 அலுவலா்களாகப் பணிபுரிந்து வருகின்றனா். 2024 ஆம் ஆண்டு குரூப் 2 எழுத்துத் தோ்வில் 21 போ் முதல்நிலைத் தோ்வில் தோ்ச்சி பெற்று அடுத்த கட்ட தோ்வுக்குப் பயிற்சி எடுத்து வருகின்றனா்.
கடந்த 2022 ஆம் ஆண்டு குரூப் 2 கலந்தாய்வில் 12 போ் பங்கேற்று 5 போ் தமிழ்நாடு அரசு அமைச்சுப் பணிகளில் சோ்ந்துள்ளனா். 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தோ்வில் 10 போ் தோ்ச்சி பெற்று தற்போது நடைபெற உள்ள கலந்தாய்வில் கலந்து கொள்ள உள்ளனா்.
இதேபோல், 2025 ஆம் ஆண்டு குரூப் 4 வகுப்பு 2.1.2025 முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டு 80 போ் விருப்பம் தெரிவித்து 54 போ் வகுப்பில் கலந்து கொண்டுள்ளனா். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் செயல்படுகின்ற தன்னாா்வப் பயிலும் வட்டத்தில் செயல்படும் கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் இதுவரை 750 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்று வருகின்றனா்.