போட்டியின் நடுவே வெளியேறிய ரிஷப் பந்த்; இந்திய அணிக்கு சிக்கலா?
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஆடுகளத்தை விட்டு போட்டியின் நடுவே வெளியேறினார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் இன்று (ஜூலை 10) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் 200 ரன்களைக் கடந்து விளையாடி வருகிறது.
ரிஷப் பந்த்துக்கு காயம்
மூன்றாவது டெஸ்ட்டின் இரண்டாவது செஷனில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், பந்தினை தடுக்க முயன்று அவருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
முதல் இன்னிங்ஸின் 34-வது ஓவரை இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வீசினார். விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த், அவருக்கு இடதுபுறம் சென்ற பந்தினை தடுக்க டைவ் அடித்தார். இருப்பினும், அவரால் பந்தினை முழுமையாக தடுக்க முடியவில்லை. இந்த முயற்சியில் அவருக்கு கை விரலில் காயம் ஏற்பட்டது.
பந்தினை தடுக்க முயன்று கையில் அடிபட்ட ரிஷப் பந்த்துக்கு, உடனடியாக ஆடுகளத்தில் வலி நிவாரணிகளைப் பயன்படுத்தி மருத்துவ உதவி செய்யப்பட்டது. இருப்பினும், அவரால் தொடர்ந்து கீப்பிங் செய்ய முடியவில்லை. இதனையடுத்து, பும்ராவின் ஓவர் முடிவடைந்தவுடன், ரிஷப் பந்த் ஆடுகளத்திலிருந்து வெளியேறினார்.
Update: #TeamIndia vice-captain Rishabh Pant got hit on his left index finger.
— BCCI (@BCCI) July 10, 2025
He is receiving treatment at the moment and under the supervision of the medical team.
Dhruv Jurel is currently keeping wickets in Rishabh's absence.
Updates ▶️ https://t.co/X4xIDiSmBg#ENGvINDpic.twitter.com/MeLIgZ4MrU
விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் போட்டியின் நடுவே காயம் காரணமாக வெளியேறிய நிலையில், அவருக்குப் பதிலாக துருவ் ஜுரெல் விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார்.
காயம் காரணமாக போட்டியின் நடுவே வெளியேறிய ரிஷப் பந்த், பேட்டிங் செய்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவருடைய காயத்தின் தன்மை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை இந்திய அணியின் மருத்துவக் குழு சோதித்து வருகிறது. காயம் காரணமாக அவர் பேட்டிங் செய்ய முடியாத சூழல் உருவாகும் பட்சத்தில், அது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும் எனக் கூறப்படுகிறது.
Wicketkeeper Rishabh Pant left the field due to injury on the first day of the third Test against England.
இதையும் படிக்க: 5 பந்துகளில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர்; அயர்லாந்து வீரரின் அசத்தலான சாதனை!