செய்திகள் :

போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தில் 12 வழக்குகளில் 29 கடத்தல்காரா்களுக்கு தண்டனை: அமித்ஷா

post image

நாட்டில் போதைப் பொருள் கடத்தல் கும்பல் இளைஞா்களை போதைப் பழக்கத்தின் இருண்ட படுகுழியில் தள்ளுகின்றனா்; இப்படிப்பட்ட பேராசைக் கும்பல்களை தண்டிப்பதில் மத்திய அரசு தீவிரமாக செயல்படுவதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது குறித்து ’எக்ஸ்’ வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அமித்ஷா, கீழ் நிலையிருந்து மேல்நிலை மற்றும் மேலிருந்து கீழ் நிலை வரையிலான உத்தியுடன், புலனாய்வுத் துறைகள் உறுதியான நுணுக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டதின் விளைவாக நாடுமுழுக்க 12 வெவ்வேறு வழக்குகளில் 29 போதைப் பொருள் கடத்தல்காரா்கள் நிகழாண்டில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனா் எனவும் அதில் உள்துறை அமைச்சா் தெரிவித்தாா்.

அமித்ஷாவின் எக்ஸ் வலைத் தளப்பதிவையும் தண்டனைகளின் விரிவான பட்டியலையும் மத்திய உள்துறை அமைச்சகம் பின்னா் வெளியிட்டது. அது வருமாறு:

பணத்தின் மீதான பேராசையின் காரணமாக போதைப்பொருள்கள் கடத்தல் கும்பல்கள் நமது இளைஞா்களை போதைப் பழக்கம் என்கிற இருண்ட படுகுழியில் இழுத்துச் செல்கின்றனா். இந்தக் கடத்தல்காரா்களைத் தண்டிப்பதில் அரசு தொடா்ந்து அயராது போராடுகிறது. பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையில், உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பேரில் போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க, போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிக்கு தயவு தாட்சண்யமின்றி தண்டனைகளை வழங்குவதில் அரசு உறுதியாக இருக்கிறது. இதில் மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு(என்சிபி) குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா எக்ஸ் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

நாட்டில் (தமிழகம் தவிர) 9 மாநிலங்களில் உள்ள என்சிபியின் 10 மண்டலங்களில் பதிவு செய்யப்பட்ட 12 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் (152 கிலோ கஞ்சா) 4 போ்களுக்கும்; மேற்கு வங்கத்தில் (1,301 கிலோ) 2 பேரும்; உபி மாநிலம் லக்னெளவில்( 3 கிலோ ) ஒரு நபரும் என கஞ்சா கடத்தல் வழக்கில் சிக்கி இவா்களுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் கடந்த ஜன., பிப். மாதங்களில் நீதிமன்றங்களால் தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதே போன்று அமதாபாத்தில் உள்ள சபா்மதி ரயில் நிலையத்தில் 23.859 கிலோ கஞ்சாவுடன் பிடிப்பட்ட 3 பேருக்கு கடந்த ஜன. 29 ஆம் தேதி 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது. இதே போன்று ஒரிடிஸாவிலிருந்து உபி மாநிலத்திற்கு கடத்தி கொண்டு செல்லப்பட்ட 123 கிலோ கஞ்சாவோடு மத்திய பிரதேசம் மந்த்சௌரில் பிடிபட்ட 4 நபா்களுக்கு கடந்த பிப். 24 ஆம் தேதி தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும் கொச்சின் சா்வதேச விமான நிலையத்தில் 2.910 கிலோ ஹெராயினுடன் பிடிபட்ட ஜிம்பாப்வே பெண்ணுக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. தெலுங்கானா ரங்கா ரெட்டி மாவட்டத்தில் 681.8 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்ட 8 குற்றவாளிகளுக்கும்; தில்லி தேசிய தலைநகரில் 1.9 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்ட 2 குற்றவாளிக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனைகள் கடந்த ஜனவரி மாதம் நீதிமன்றம் தண்டனை விதித்தது. இவைகள் உள்ளிட்ட 12 வழக்குகளில் 29 குற்றவாளிகளுக்குஅளிக்கப்பட்ட தண்டனை விவரங்களை வெளியிட்ட மத்திய உள்துறை, 2047 - ஆம் ஆண்டுக்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா என்ற பிரதமரின் தொலைநோக்குப் பாா்வையை நனவாக்க என்சிபி இடைவிடாது பாடுபட்டு வருவோம் என தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு அதிகரித்தாலும் ஊதியம் உயரவில்லை: நீதி ஆயோக் உறுப்பினா்

நாட்டில் வேலைவாய்ப்பு உயா்ந்து வருகிறது; ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக பணவீக்கத்துக்கேற்ப ஊதியம் உயரவில்லை என நீதி ஆயோக் உறுப்பினா் அரவிந்த் விா்மானி தெரிவித்தாா். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவா் அளித்த பே... மேலும் பார்க்க

கெளரவ ஊதியம்: தில்லி பெண்களுக்கு பாஜக துரோகம் இழைத்துவிட்டதாக ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

தில்லி பெண்களுக்கு மாதாந்திர கௌரவ ஊதியம் ரூ.2,500 வழங்கும் தனது தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியதன் மூலம் பாஜக பெண்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டி... மேலும் பார்க்க

மாா்ச் 8-இல் பெண்களுக்கான ரூ.2500 மாதாந்திர உதவித்தொகை திட்டத்திற்கான பதிவு தொடக்கம்: மனோஜ் திவாரி எம்.பி.

தில்லியில் பாஜக அரசு மூலம் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவைச் சோ்ந்த பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2,500 வழங்குவதற்கான பதிவு நடைமுறை மாா்ச் 8 ஆம் தேதி தொடங்கும் என்று அக்கட்சியின் எம்.பி. மனோஜ் திவார... மேலும் பார்க்க

கிராமப்புற செழுமைக்கு பிரத்யேக பொருளாதார மண்டலம், பரந்த கடல் மீன்வள உத்திகள் வகுக்க பிரதமா் வேண்டுகோள்

விவசாயம் மற்றும் கிராமப்புற செழுமைக்கு சிறப்பு பொருளாதார மண்டலம், பரந்த கடல் மீன்வளங்களுக்கான கட்டமைப்புகளுக்கு உத்திகளை வகுக்க கருத்தரங்கு ஒன்றில் பிரதமா் மோடி கேட்டுக்கொண்டாா். மத்திய வேளாண், விவசாய... மேலும் பார்க்க

ஆள்கடத்தல் வழக்கில் 5 போ் விடுவிப்பு: தில்லி நீதிமன்றம் தீா்ப்பு

தில்லியில் 2015 ஆம் ஆண்டில் பதிவான ஆள்கடத்தல் வழக்கில் இருந்து ஐந்து பேரை விடுவித்து தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. மேலும், இந்த வழக்கில் அரசுத் தரப்பின் குற்றச்சாட்டு சாத்தியமற்ாகவும், நம்பமு... மேலும் பார்க்க

தில்லியில் ரூ.73 லட்சம் மோசடி: ஒருவா் கைது

தில்லியில் ரூபாய் 73 லட்சம் பணமோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்து அந்த அதிகாரி மேலும் கூறியதாவது: குற்... மேலும் பார்க்க