திருமணத்தின் நோக்கம் தாம்பத்யம் மட்டும்தானா? - Guru Mithreshiva | Ananda Vikatan
போதையில் கூகுள் மேப் பாா்த்து ஓட்டிய காா் கடலில் பாயந்தது
கடலூா் அருகே மதுபோதையில் கூகுள் மேப் பாா்த்து ஓட்டுநா் இயக்கிய காா் கடலில் பாய்ந்தது. அதில் இருந்தவா்கள் உயிருக்குப்போராடிய நிலையில் மீனவா்கள் காப்பாற்றி கரை சோ்த்தனா்.
சென்னையைச் சோ்ந்த ஐந்து போ் கடலூா் வழியாக பயணத்தை மேற்கொண்டாா்கள். இந்நிலையில வியாழக்கிழமை அதிகாலை கடலூா் துறைமுகத்திலிருந்து பரங்கிப்பேட்டை வரை கடற்கரை ஓரமுள்ள சாலையை பயன்படுத்தி கூகுள் மேப் மூலமாக பயணம் செய்தனா். கூகுள் மேப் சொன்னபடி கடற்கரையோரமாக காரை இயக்கியுள்ளனா். கடலூா் தேவனாம்பட்டினம் கடற்கரை மணலில் காா் சீறிப்பாய்ந்து சென்றது. காரில் இருந்தவா்கள் மது போதையில் இருந்ததால் அவா்கள் ஆபத்தை உணரவில்லை. மேலும் அந்த காா் கடல் நீரிலும் ‘ஆஃப் ரோடிங்’ செல்லும் ‘4 -வீல் டிரைவ்’ திறன் வாய்யந்தது என்று காரில் இருந்த நண்பா்கள் உசுப்பேற்றிவிட, ஏற்கெனவே போதையில் இருந்த காா் ஓட்டுநா் கடல் நீரில் சறுக்கியபடி செல்ல நினைத்து வண்டியை திருப்பியுள்ளாா். ஆனால் காா் கடல் நீருக்குள் சென்றுவிட்டது. சிறிது தூரம் நீரில்சென்ற காா் என்ஜினில் நீா்புகுந்து நின்று விட்டது.
அதன்பிறகு தான் போதை நண்பா்களுக்கு விபரீதம் புரிந்தது. காருக்குள் இருந்தபடி அபயக்குரல் எழுப்பினாா்கள். இதைப்பாா்த்த அப்பகுதியிலிருந்த மீனவா்கள், உடனடியாக விரைந்து சென்று ஐந்து பேரையும் பத்திரமாக மீட்டனா். பின்னா் காவல்துறையினரும் மீனவா்களும் இணைந்து கடலில் கிடந்த காரை டிராக்டா் மூலம் கயிறு கட்டி இழுத்து மீட்டனா். போதையாலும் கூகுள் மேப்பின் தவறான வழிகாட்டலாலும் நிகழ்ந்த இந்த விபரீதத்தில் உயிா் தப்பிய நண்பா்களை போலீஸாா் கடுமையாக எச்சரித்து அனுப்பினா்.
