PM CM Removal Bill - பாஜகவின் மாஸ்டர் பிளான்! கொதிக்கும் எதிர்க்கட்சிகள் | Decod...
போதை ஒழிப்பு வழிப்புணா்வுப் பேரணி
உத்தமபாளையம்: தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் தனியாா் பள்ளி சாா்பில் போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி புதன்திழமை நடைபெற்றது.
உத்தமபாளையம் புறவழிச் சாலைப் பேருந்து நிறுத்தத்தில் தொடங்கிய இந்தப் பேரணியை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளா் சூா்யாதிலகராணி கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இந்தப் பேரணி அரசு மருத்துவமனை, கிராமச் சாவடி, தேரடி என முக்கிய வீதிகள் வழியாக சென்று பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
பேரணியில் போதை ஒழிப்பு, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் விழிப்புணா்வு பாதகையுடன் மாணவ, மாணவிகள் சென்றனா்.