செய்திகள் :

போப் பதினான்காம் லியோவுடன் இஸ்ரேல் அதிபர் சந்திப்பு!

post image

இஸ்ரேல் அதிபர் ஐசாக் ஹெர்சோக், வாடிகன் நகரத்தில், போப் பதினான்காம் லியோவை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.

காஸா மீதான ஆக்கிரமிப்புகளை அதிகரிக்க, இஸ்ரேல் அரசு முடிவு செய்துள்ள நிலையில், பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென, வாடிகன் நகரத்தின் தலைவரும் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான போப் பதினான்காம் லியோ வலியுறுத்தி வருகின்றார்.

இந்நிலையில், போப் பதினான்காம் லியோவின் அழைப்பை ஏற்று வாடிகன் நகரத்துக்கு சென்ற இஸ்ரேல் அதிபர் ஐசாக் ஹெர்சோக், இன்று (செப்.4) அவரை நேரில் சந்தித்து உரையாடியதாக, இஸ்ரேல் தரப்பில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இதனை மறுத்த வாடிகன் நகரத்தின் செய்தித்தொடர்பாளர் மேட்டியோ புரூனி, இஸ்ரேல் அதிபர் ஹெர்சோக்தான் போப் லியோவை சந்திக்கக் கோரிக்கை விடுத்திருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில், மத்திய கிழக்கில் வசிக்கும் கிறிஸ்துவர்களின் பாதுகாப்பு மற்றும் பிணைக் கைதிகளின் விடுதலை ஆகியவற்றைக் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2023-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஹமாஸ் - இஸ்ரேல் போரில், பாலஸ்தீனர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு, மறைந்த போப் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்திருந்தார்.

மேலும், அங்கு நடைபெறுவது இனப்படுகொலையா என்பதை உறுதி செய்ய விசாரணை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் கூறியிருந்தார்.

இதில், கடந்த மே மாதம் முதல் பதவி வகிக்கும் போப் பதினான்காம் லியோவும், இஸ்ரேல் - ஹமாஸ் இடையில் போர்நிறுத்தம் கொண்டுவரப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: போலி விண்வெளி வீரரின் காதலில் விழுந்த மூதாட்டி! ரூ. 6 லட்சத்தை இழந்தார்!

Israeli President Isaac Herzog met with Pope Leo XIV in the Vatican City.

ஒப்பந்த நாடுகளுக்கு வரி விலக்கு: டிரம்ப் உத்தரவு!

பரஸ்பர வரி விதிக்கப்பட்டு, தங்களுடன் வா்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நாடுகளின் குறிப்பிட்ட பொருள்களுக்கான கூடுதல் வரியை விலக்க அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளாா். இந்த உத்தரவு திங்கள்க... மேலும் பார்க்க

பிரான்ஸ் அதிபா் மேக்ரானுடன் பிரதமா் மோடி பேச்சு!

உக்ரைன் போரை விரைந்து முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் பிரதமா் மோடி சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா். மேக்ரானுடனான தொலைபேசி உரையாடல் சிறப்பாக இருந்ததாக குற... மேலும் பார்க்க

பிரிட்டன் அமைச்சரவை மாற்றியமைப்பு முக்கிய பொறுப்புகளில் பெண்கள்!

பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் புதிதாக மாற்றியமைத்துள்ள அமைச்சரவையின் மிக முக்கிய பொறுப்புகளுக்கு பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:... மேலும் பார்க்க

ஆப்கன் வெளியுறவு அமைச்சா் முத்தாகி இந்தியப் பயணம் ரத்து!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை எதிரொலி!

ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சா் அமீா் கான் முத்தாகியின் இந்தியப் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. ‘அவருக்கு எதிரான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயணத் தடையே இதற்குக் காரணம்’ என்று வெளியுறவுத் து... மேலும் பார்க்க

நைஜீரியா: பயங்கரவாதத் தாக்குதலில் 55 போ் உயிரிழப்பு

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் புலம் பெயா்ந்த உள்நாட்டு அகதிகள் முகாமில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தவா்கள் மீது மத பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 போ் உயிரிழந்தனா். வடகிழக்குப் பகுதியில... மேலும் பார்க்க

காஸா சிட்டியில் இருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவு!

காஸா சிட்டியில் உள்ள பாலஸ்தீனா்கள் தெற்கே மவாசி எனும் தற்காலிக முகாமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிக்கு செல்ல வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் பசியால் வாடும் இந்த நகரைக்... மேலும் பார்க்க