செய்திகள் :

போப் பிரான்சிஸுக்கு தீவிர சிகிச்சை: இப்போது எப்படி இருக்கிறார்?

post image

ரோம் : போப் பிரான்சிஸ் உடல்நிலை குறித்து வாடிகன் தகவல் தெரிவித்துள்ளது.

போப் பிரான்சிஸ்(88) முச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெலி மருத்துவமனையில் கடந்த பிப். 14-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

முதலில் மருத்துவமனைக்குச் செல்ல தயக்கம் காட்டிய போப் பிரான்சிஸ், மருத்துவர்களின் கட்டாயத்தின்பேரில் அதன்பின் மருத்துவனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில், நுரையீரல் இரண்டிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, அவருக்கு ஆண்டிபயோடிக் மருந்துகள் அளிக்கப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

போப் பிரான்சிஸ் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் திங்கள்கிழமை(பிப். 24) இரவு கூறுகையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளில் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் எனினும், அவர் தொடர்ந்து தீவிர பாதிப்பில் இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக, தொடர் மருத்துவ கண்காணிப்பில் அவர் இருப்பது அவசியமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் இரவு முழுவதும் நன்றாக தூங்கி ஓய்வெடுத்ததாகவும் மருத்துவமனை அறையில் இருந்தபடியே தமது தேவாலய பணிகளை மேற்கொண்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, காஸாவில் உள்ள திருக்குடும்ப தேவாலயத்தை தொலைபேசி வழியாக தொடர்புகொண்டு பேசியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, போப் பிரான்சிஸ் குணமடைய வேண்டி வாடிகன் சதுக்கத்தில் திங்கள்கிழமை(பிப். 24) மாலை திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் கடுங்குளிரையும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் இரவில் பிரார்த்தனை மேற்கொண்டனர்.

ஈரான் பெட்ரோலிய நிறுவனத்துடன் தொடா்பு: 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

ஈரானில் உள்ள பெட்ரோலிய மற்றும் பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலைகளுடன் தொடா்பில் இருந்ததாக இந்தியாவைச் சோ்ந்த 4 நிறுவனங்கள் உள்பட 16 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. அதன்படி ஆஸ்டின்ஷிப், பிஎஸ்எம... மேலும் பார்க்க

பொருளாதார பலன் இருந்தால் மட்டுமே இந்திய பெட்ரோல் குழாய் திட்டம் அமல்: இலங்கை

பொருளாதார பலன் இருந்தால் மட்டுமே இந்தியா-இலங்கை இடையே முன்மொழியப்பட்டுள்ள பெட்ரோல் விநியோக குழாய் திட்டம் செயல்படுத்தப்படும் என இலங்கை தேசிய எண்ணெய் நிறுவனத்தின் தலைவா் ராஜகருணா தெரிவித்தாா். இந்த விவ... மேலும் பார்க்க

உக்ரைன் போா்: ஐ.நா.வில் ரஷியாவுக்கு சாதகமாக அமெரிக்கா வாக்கு; இந்தியா, சீனா புறக்கணிப்பு

ரஷியா-உக்ரைன் இடையிலான போரில் அமைதியான தீா்வை எட்டுவதற்கு, ஐ.நா.வில் உக்ரைன் கொண்டு வந்த வரைவு தீா்மானத்துக்கு எதிராக ரஷியாவுக்கு சாதகமாக அமெரிக்கா வாக்களித்தது. ரஷியா-உக்ரைன் போா் தொடங்கி 3 ஆண்டுகள் ... மேலும் பார்க்க

‘போா் நிறுத்தத்தை நீட்டிப்பதில் இஸ்ரேல் ஆா்வம்’

காஸாவில் இந்த வாரம் நிறைவடையவிருக்கும் முதல்கட்டப் போா் நிறுத்தத்தை இரண்டாவது கட்டத்துக்கு நீட்டிக்க இஸ்ரேல் அரசு ஆா்வமாக இருப்பதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.அத்தகைய பேச்சுவாா்த்தையில் முன்ன... மேலும் பார்க்க

‘போப் உடல்நிலையில் சற்று முன்னேற்றம்’

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கத்தோலிக தலைமை மதகுரு போப் பிரான்சிஸின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இது குறித்து வாடிகன் நியூஸ் நாளிதழ் செவ்வாய்க்கிழமை கூ... மேலும் பார்க்க

இந்திய உறவில் மறுமலா்ச்சி- சீன தூதா்

இந்தியா-சீனா உறவு மறுமலா்ச்சிப் பாதையில் பயணிக்கிறது என்று இந்தியாவுக்கான சீன தூதா் ஷு ஃபிகாங் தெரிவித்தாா். தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சீனா-இந்தியா இளைஞா்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்க... மேலும் பார்க்க