மகா கும்பமேளா: ஆன்மிகம், கலாசாரம், மக்கள் ஒற்றுமையின் சங்கமம்!
இந்திய உறவில் மறுமலா்ச்சி- சீன தூதா்
இந்தியா-சீனா உறவு மறுமலா்ச்சிப் பாதையில் பயணிக்கிறது என்று இந்தியாவுக்கான சீன தூதா் ஷு ஃபிகாங் தெரிவித்தாா்.
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சீனா-இந்தியா இளைஞா்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் இது தொடா்பாக மேலும் கூறியதாவது:
இந்தியா-சீனா இடையே அண்மையில் நடைபெற்ற சிறப்பு பிரதிநிதிகள் நிலையான பேச்சுவாா்த்தை இரு நாடுகள் இடையே பரஸ்பரம் புரிதலை ஏற்படுத்தியுள்ளதுடன், உறவை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் அதிகரித்துள்ளது.
இந்த இரு நாடுகளுக்கு இடையே நல்லுறவு வலுப்படுவது சா்வதேச அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அடுத்தகட்டமாக இரு நாடுகளின் இளைய தலைமுறையினா் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். இரு நாடுகள் இடையே தூதரக உறவு ஏற்படுத்தப்பட்டதன் 75-ஆவது ஆண்டு விழாவை நாம் விரைவில் கொண்டாட இருக்கிறோம் என்றாா்.
கிழக்கு லடாக்கில் ஏற்பட்ட எல்லைப் பிரச்னைக்கு தீா்வுகாணும் வகையில் இரு நாடுகளும் எல்லையில் குவித்த படைகளை படிப்படியாக திரும்பப் பெற்றன.