செய்திகள் :

போப் லியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

post image

புனித போப் பதினான்காம் லியோவுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, புனித போப் பதினான்காம் லியோவுக்கு இந்திய மக்கள் சார்பில் நல்வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அமைதி, நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் சேவையின் கொள்கைகளை முன்னேற்றுவதில் ஆழ்ந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணத்தில் கத்தோலிக்க திருச்சபையில் அவரது தலைமைத்துவம் தொடங்குகிறது.

நமது பகிரப்பட்ட மதிப்புகளை மேலும் மேம்படுத்துவதற்காக, புனித ரோம் கத்தோலிக்க திருச்சபையுடன் தொடர்ந்து உரையாடலுக்கும், ஈடுபாட்டிற்கும் இந்தியா உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய போப்பாக ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டதாக வாடிகன் நேற்று அறிவித்தது.

ஆபரேஷன் சிந்தூர்: என்ன செய்யலாம், செய்யக்கூடாது.. மத்திய அரசு அறிவுரை

ரோம் நகரின் சிஸ்டைன் தேவாலயத்தில் 133 கார்டினால்களும் சேர்ந்து புதிய போப்பைத் தேர்ந்தெடுத்தனர். போப் பதவிக்கு அமெரிக்கர் ஒருவர் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். புதிய போப் இனி 14 ஆம் லியோ என்ற பெயரால் அழைக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல்நலக் குறைவு காரணமாக கத்தோலிக்க திருச்சபையின் 266-வது தலைவா் போப் பிரான்சிஸ் கடந்த மாதம் 21 ஆம் தேதி காலமான நிலையில் புதிய போப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை: இந்திய விமானப்படை

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை என்று இந்திய விமானப் படை விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து இந்திய விமானப் படை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான ராணுவ நடவடிக்கைகள் இன்னும் ... மேலும் பார்க்க

மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்திற்கான கதவுகளைத் திறந்துவிட்டோமா? - ஜெய்ராம் ரமேஷ் கேள்வி

மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்திற்கான கதவுகளை நாம் திறந்துவிட்டோமா என்று காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களைக... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீர், பஞ்சாபில் மீண்டும் இயல்புநிலை

இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர், பஞ்சாபில் ஞாயிற்றுக்கிழமை காலை இயல்பு நிலை திரும்பியது.பஹல்காம் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம்... மேலும் பார்க்க

முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து முப்படை தலைமைத் தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், ம... மேலும் பார்க்க

மணிப்பூரில் 11 தீவிரவாதிகள் கைது

மணிப்பூரில் உள்ளூர் மக்களை மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டில் 11 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இம்பால் மேற்கு, காக்சிங், பிஷ்ணுபூர் மற்றும் தௌபல் மாவட்டங்களில் இருந்து அவர்கள் கைது செய்யப்பட்... மேலும் பார்க்க

மணிப்பூர் காவல் துறையினர் தேடுதல் வேட்டை: ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்

கடந்த 24 மணி நேரத்தில் மணிப்பூர் காவல் துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் பல்வேறு ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், மணிப்பூர் மாநிலத்தில் மிரட்ட... மேலும் பார்க்க