செய்திகள் :

"போராடும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை திமுக அரசு ஏற்க வேண்டும்" - சீமான், கி.வீரமணி ஆதரவு

post image

அப்செட்டாக மண்டலங்கள் 5 மற்றும் 6 யை தனியார்மயப்படுத்துவதை எதிர்த்தும், பணி நிரந்தரம் கோரியும் சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடி வரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 10 வது நாளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அமைச்சர் சேகர் பாபு தலைமையில் போராட்டக்குழு நடத்திய பலகட்டப் பேச்சுவார்த்தைகளிலும் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை.

சேகர் பாபு
சேகர் பாபு

'கெட்டப் பேராகுது; கலைஞ்சு போங்க!’ - கண்டிஷன் போடும் அமைச்சர் சேகர் பாபு? முறிந்த பேச்சுவார்த்தை

இந்தச் சூழலில் சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடிக் கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்போராட்டத்திற்கு ஆதரவு தந்து பேசியிருக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், "தூய்மைப் பணியை தனியாருக்கு ஏன் கொடுக்க வேண்டும்? பிறகு மாநகராட்சி எதற்கு? ஆந்திராவை சேர்ந்த ராம்கி என்ற நிறுவனத்திற்கு ஆண்டுக்கு ரூ.2,700 கோடியை அரசு தருகிறது. எல்லாவற்றையும் தனியாருக்கு தாரை வார்க்கும் அரசு மதுபானத்தை மட்டும் தானே விற்கிறது" என்று பேசியிருக்கிறார்.

சீமான், கி.வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, "தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கையை சமூகநீதி கண்ணோட்டத்தில் பரிசீலிக்க வேண்டும்; மனித நேயத்தோடு தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை முதல்வர் அணுக வேண்டும் திமுக ஆட்சிக்கு எதிராக இந்த பிரச்னைகளை பிறர் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது" என்று ஆதரவளித்துப் பேசியிருகிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

தூய்மைப் பணியார்கள் போராட்டம்: `துறை அமைச்சர் பேசவில்லையா? முதல்வர் சொன்ன விஷயம்'- கே.என்.நேரு பதில்

எந்தவொரு முடிவும் எட்டப்படாமல் 11 நாள்களுக்கு மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், த.வெ.க தலைவர்... மேலும் பார்க்க

சமூக விரோதிகளின் கூடாரமாகும் ஆண்டிபட்டி வாரச் சந்தை கடைகள்; அலட்சியம் காட்டும் அதிகாரிகள்!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டிபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள 100-150 கிராம மக்கள் காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும் இந்த காய்கறி சந்தைக்குத்... மேலும் பார்க்க

Stray Dogs: ``ரூ.15,000 கோடி இருக்கிறதா?'' - உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மேனகா காந்தி கேள்வி

தெருநாய்க்கடி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.நேற்றைய விசாரணையில், ``தெரு நாய்க்கடியினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களை, விலங்குகள் நல ஆர்வலர... மேலும் பார்க்க

Stray Dogs: "நாய்களைப் பாதிக்கும்; ஒரே வழி..." - உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பீட்டா அமைப்பு எதிர்வினை

தெரு நாய்க்கடி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.நேற்றைய விசாரணையில், ``தெரு நாய்க்கடியினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களை, விலங்குகள் நல ஆர்வல... மேலும் பார்க்க

Roundup: தீவிரமடையும் தூய்மை பணியாளர்கள் போராட்டம் டு கர்நாடக அமைச்சரின் ராஜினாமா வரை|11.8.2025

ஆகஸ்ட் 11 முக்கியச் செய்திகள்!எந்தவொரு முடிவும் எட்டப்படாமல் 11 நாள்களுக்கு மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் தூய்மை பணியாளர்களின் போராட்டத்திற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வ... மேலும் பார்க்க

`பாலாற்றில் கலக்கும் தோல் தொழிற்சாலை கழிவுநீர்' 3 மாவட்ட கலெக்டர்களிடம் காட்டமான உச்ச நீதிமன்றம்

தமிழ்நாட்டில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக செல்லும் பாலாற்றில், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் கழிவுகளை கலப்பதாகவும், இதனால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படுவதா... மேலும் பார்க்க