போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!
புது தில்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலகம் முழுவதும் இந்தியா - பாகிஸ்தான் உள்பட ஐந்து போர்களை தானே மத்தியஸ்தம் செய்து நிறுத்தியதாக பெருமிதத்துடன் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
தன்னுடைய ட்ரூத் எனப்படும் சமூக வலைத்தளத்தில் இது பற்றி டிரம்ப் கருத்துப் பதிவிட்டிருக்கிறார்.
உலகில் வெறும் ஐந்து போர்களை நிறுத்தியிருக்கிறேன், அதில், 31 ஆணடுகளாக நீடித்து வரும் காங்கோ - ரூவாண்டா நாடுகளுக்கு இடையேயான போரும் உள்ளடக்கம். இந்த போரில் மட்டும் இதுவரை 70 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். போர் நிறுத்தப்படுவதற்கான தடயமே இல்லாமல் இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வானொலி தொகுப்பாளர் ஒருவரின் பேச்சுக்கு பதிலளித்து டிரம்ப் தெரிவித்திருக்கும் பதிவில், அவருக்குத் தெரிந்திருக்கவில்லை, இந்தியா - பாகிஸ்தான் அல்லது ஈரானின் அணுசக்தி திறன் பற்றியோ அல்லது எல்லையை மூடியது பற்றியோ, மிகப்பெரிய பொருளாதாரத்தை உருவாக்கியது குறித்து என்று குறிப்பிட்டுள்ளார்.