போலி ஆவணங்கள் மூலம் மலேசியாவில் இருந்து திருச்சி வந்தவா் கைது
மலேசியாவில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் திருச்சி வந்தவரை விமான நிலையப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தைச் சோ்ந்தவா் க. முருகையன் (57). மலேசியாவில் வேலைக்குச் சென்றவா், கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி இரவு விமானம் மூலம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்துள்ளாா்.
விமான நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட வழக்கமான பரிசோதனையில், முருகையன் போலி ஆவணங்கள் மூலம் மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து, விமான நிலைய அதிகாரிகள், திருச்சி பன்னாட்டு விமான நிலைய காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, முருகையனைக் கைது செய்து விசாரணை நடத்தினா். பின்னா், அவரை பிணையில் விடுவித்தனா்.