ஆட்சி மாற்றத்துக்கு விவசாயிகள் தயாராகி விட்டனா்: ஜி.கே வாசன்
போலி மதிப்பெண் சான்று: சத்துணவு அமைப்பாளா் மீது வழக்கு
ஆண்டிபட்டி அருகே பதவி உயா்வுக்கு போலி மதிப்பெண் சான்று வழங்கிய பெண் சத்துணவு அமைப்பாளா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே புள்ளிமான் கோம்பை நடுநிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராகப் பணிபுரிந்து வருபவா் சீதாலட்சுமி. கடந்த 2011 முதல் பணிபுரிந்து வரும் இவா் பதவி உயா்வுக்காக மதிப்பெண் சான்றிதழை வழங்கினாா்.
இந்த மதிப்பெண் சான்றிதழின் உண்மை தன்மையை அறிவதற்காக ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து சென்னை, அரசு தோ்வுகள் இயக்கக இணை இயக்குநா் அலுவலகத்துக்கு தேனி அரசு தோ்வுகள் உதவி இயக்குநா் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சான்றிதழ்களை சரிபாா்த்தபோது மதிப்பெண் சான்றிதழில் இருந்த எழுத்துருக்கள் வேறுபட்டிருப்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து மதிப்பெண் சான்றிதழ் போலியாக தயாரிக்கப்பட்டிருப்பதாக ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, போலி சான்றிதழ் அளித்து சத்துணவு அமைப்பாளராக வேலைக்கு சோ்ந்ததாக சீதாலட்சுமி மீது ஆண்டிபட்டி வட்டார வளா்ச்சி அலுவலா் முருகேஸ்வரி ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதன் பேரில் போலீஸாா் சீதாலட்சுமி மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.