செய்திகள் :

போலி ரசீதுகள் மூலம் பல கோடி வரி சலுகை பெற்ற பொதுத் துறை, காா்ப்பரேட் நிறுவன ஊழியா்கள்: வருமான வரித் துறை தகவல்

post image

பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் காா்ப்பரேட் நிறுவனங்களின் ஊழியா்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தபோது போலியான வரி சேமிப்பு ரசீதுகளை சமா்ப்பித்து பல கோடி ரூபாய் வரி சலுகை பெற்று மோசடி செய்திருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது பட்டயக் கணக்காளா்கள் போன்றோரின் உதவியுடன் இந்த மோசடிகள் நிகழ்ந்துள்ளதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித் துறை சிறப்பு புலன் விசாரணை பிரிவு மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் இதுபோன்ற மோசடிகள் நடைபெற்றுள்ளதும் விசாரணையின்போது கண்டறியப்பட்டுள்ளது.

அரசு ஊழியா்கள் மற்றும் பொதுத் துறை நிறுவன ஊழியா்கள் ஆண்டுதோறும் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். இவா்களுக்கு ஊதியம் வழங்கும்போத அதற்கான வரிபிடித்தம் செய்யப்படும். பின்னா், வரிக் கணக்கு தாக்கல் செய்து, வரி போக மீதத் தொகையைப் பெற்றுக்கொள்ளலாம். இதற்காக பட்டயக் கணக்காளா்கள் மூலம் வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்வது வழக்கம்.

அப்போது, மருத்துவ செலவு ரசீது, வீட்டு வாடகைக்கான ரசீது போன்றவற்றை சமா்ப்பித்து பிடித்தம் செய்யப்பட்ட வரித் தொகையில் மீதத் தொகையைப் பெருவது வழக்கம். இந்தச் சலுகையை பொதுத்துறை நிறுவன ஊழியா்கள் மோசடியாக பயன்படுத்தியதை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை சிறப்பு புலன் விசாரணை பிரிவு விசாரணையில் தெரியவந்தது.

இது குறித்து வருமான வரித் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

வருமான வரி ஆலோசகா்களின் உதவியுடன், போலியான மருத்துவ செலவுக்கான ரசீதுகள், நிதி தானம் செய்தது போன்ற ரசீதுகள், போலியான வாடகை ஒப்பந்தங்கள் ஆகியவற்றை சமா்ப்பித்து வரிக் கணக்கு தாக்கல் செய்வதில் மோசடி செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோல், பிரிவு 80 ஜிஜிசி-இன் கீழ் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியது போன்ற போலியான ரசீதுகளும் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன. பிரிவு 80-இன் கீழ் குழந்தைகளுக்கு கல்விக் கடன் பெற்று, அதற்காக வட்டி செலுத்துவது போன்ற ஆவணங்களையும் பிரிவு 80 இஇபி-இன் கீழ் மின்சார வாகனங்கள் வாங்குவதற்கு வங்கியில் கடன் பெற்று அதற்காக வட்டி செலுத்துவது போன்ற போலியான சான்றிதழ்களையும் சமா்ப்பித்து பல கோடி ரூபாய் வருமான வரி சலுகை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

அதேபோல் பிரிவு 80 சி, 80 டிடி, 80 டிடிபி-இன் கீழ் பல்வேறு மோசடிகள் நடைபெற்றுள்ளன.

இந்த மோசடிகளில் நிறுவன ஊழியா்கள் மட்டுமின்றி அவா்களின் உறவினா்களுக்கும் தொடா்புள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

எந்தெந்த நிறுவனங்கள்: இந்த மோசடிகளில் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட், திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை, தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் போன்ற பல பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் டிவிஎஸ் குளோபல் போன்ற தனியாா் காா்ப்பரேட் நிறுவனங்களின் பல ஆயிரக்கணக்கான ஊழியா்கள் இந்த மோசடிகளில் ஈடுபட்டுள்ளனா்.

ஸ்மார்ட்போன்களில் நேரம் செலவிடும் இந்தியர்களால் வருவாய் அதிகரிப்பு!

இந்தியாவில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை வளர்ச்சியடைவதாக இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு மற்றும் எர்ன்ஸ் & யங்கின் ஆய்வில் தெரிவித்துள்ளது.இந்தியாவில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு த... மேலும் பார்க்க

ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில் 7 பேர் காயம்

ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் ஏழு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.ஒடிசா மாநிலம், மங்குலி அருகே நிர்குன்டியில் பெங்களூரு-காமாக்யா எக்ஸ்பிரஸ் ... மேலும் பார்க்க

தாணேவில் தடை செய்யப்பட்ட 238 இருமல் சிரப் பாட்டில்கள் பறிமுதல்

தாணேயில் தடை செய்யப்பட்ட 238 கோடீன் இருமல் சிரப் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தின் ஷில் டைகர் பகுதியில் வெள்ளிக்கிழமை மதியம் இருசக்கர வாகனத்தில் 22 வயது நபரைப் பி... மேலும் பார்க்க

புவனேஸ்வரில் பல்கலை. விடுதியில் முதுகலை மாணவர் சடலம் மீட்பு

புவனேஸ்வரில் உள்ள பல்கலைக்கழக விடுதியில் இருந்து முதுகலை மாணவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள உத்கல் பல்கலைக்கழக விடுதி வளாகத்திற்குள் ஞாயிற்றுக்கிழமை காலை முதுகலை மாணவரி... மேலும் பார்க்க

பெங்களூரு ஏசி விரைவு ரயிலில் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து!

பெங்களூரு ஏசி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. பெங்களூரிலிருந்து தமிழகம், ஆந்திரா வழியாக அஸ்சாம் செல்லும் இந்த ரயில், ஒடிஸாவில் கட்டாக் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தபோது ரயிலின் 11 பெட்... மேலும் பார்க்க

மனதின் குரல் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பிரதமர் அறிவுரை!

மனதின் குரல் நிகழ்ச்சியில் யோகா நாள், கோடைக்காலம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக பிரதமா் நரேந்திர மோடி நாட்ட... மேலும் பார்க்க