ஆன்லைனில் நோ்காணல் நடத்தி வேலை தருவதாக பணமோசடி: 14 போ் கைது!
போலீஸாரை சுட்டுவிட்டு தப்ப முயன்ற ரௌடியை சுட்டுப் பிடித்த போலீஸார்!
அன்னூர்: கோவை அருகே நாட்டுத் துப்பாக்கியால் போலீஸாரை சுட முயன்ற ரௌடியை போலீஸார் புதன்கிழமை சுட்டுப் பிடித்தனர்.
கோவை மாவட்டம், கோவில்பாளையம் வெள்ளானைப்பட்டி சாலையில் செரையாம்பாளையம் அருகே உள்ள மதுக்கூடத்தில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் செவ்வாய்க்கிழமை மது அருந்தியுள்ளார்.
அதே மதுக்கூடத்தில் கோவை சரவணம்பட்டி காபிக்கடை பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் மகன் ஹரிஸ்ரீ (23) என்பவரும் மது அருந்தியுள்ளார். மது அருந்திவிட்டு இருவரும் வெளியே வந்தபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, ஹரிஸ்ரீ தான் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு சக்திவேலை மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து கோவில்பாளையம் காவல் நிலையத்தில் சக்திவேல் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஹரிஸ்ரீயை புதன்கிழமை கைது செய்தனர். பின்னர், அவர் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை மீட்பதற்காக ஆய்வாளர் இளங்கோ தலைமையிலான போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.
முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு தந்தை வெங்கடாசலம் (90) காலமானார்
அப்போது, போலீஸாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற ஹரிஸ்ரீ, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் போலீஸாரை நோக்கிச் சுட்டுள்ளார். அப்போது, தற்காப்புக்காக ஆய்வாளர் இளங்கோ, ஹரிஸ்ரீயின் காலில் சுட்டுள்ளார்.
இதையடுத்து, காயமடைந்த ஹரிஸ்ரீயை மருத்துவமனைக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், கருமத்தம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் தங்கராமன், கோவில்பாளையம் ஆய்வாளர் இளங்கோ, சூலூர் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை, சூலூர் வட்டாட்சியர் சரண்யா ஆகியோர் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்தில் நேரில் ஆய்வு செய்து, விசாரணை நடத்தினர்.
இவர் மீது பீளமேடு காவல் நிலையத்தில் ஆயுத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.