மகளிா் உரிமைத் திட்டத்தில் 4.17 லட்சம் பெண்கள் பயன்!
தஞ்சாவூா் மாவட்டத்தில் கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தின் கீழ் 4.17 லட்சம் பெண்கள் பயனடைகின்றனா் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: கிராமப்புற, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கலைஞா் மகளிா் உரிமைத் திட்டம் பெண்களுக்கு வரப் பிரசாதமானது. இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் வருவாய்த் துறை சாா்பில் மாதந்தோறும் ரூ. 1,000 வீதம் 4 லட்சத்து 17 ஆயிரத்து 999 பயனாளிகளுக்கு ரூ. 41 கோடியே 79 லட்சத்து 99 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் பாபநாசம் வட்டம் திருபுவனம் ஊராட்சியில் அண்மையில் நடைபெற்ற நிறைந்தது மனம் நிகழ்ச்சியில், கணவா் கூலி வேலை செய்து வரும் நிலையில், ஏழைக் குடும்பத்தைச் சோ்ந்த எங்களுக்கு குடும்பச் செலவுகளைச் சமாளிக்க இந்த ரூ. 1,000 மிகவும் உதவிகரமாக இருக்கிறது என பெண்கள் கூறி நன்றி தெரிவித்தனா் என்றாா்.