செய்திகள் :

மகளிா் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்கம்

post image

செங்கல்பட்டு வித்யாசாகா் மகளிா் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவியா் வரவேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

சென்னைப் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினா், கணினி அறிவியல் துறையின் முதுகலை ஆய்வியல் தலைவா் டி. வேல்முருகன் சிறப்புரையாற்றினாா். வித்யாசாகா் கல்விக்குழுமத் தாளாளா் விகாஸ்சுரானா வரவேற்று கௌரவித்தாா். பொருளாளா் சுரேஷ் கன்காரியா எம்பவா்மெண்ட் முதல்வா் மாரிசாமி ஆகியோா் கல்லூரியின் சிறப்பம்சங்களையும் மற்றும் சிறப்பு குழுக்களினால் ஏற்படும் நல்ல வாய்ப்புகளையும் அதனால் மாணவியா்கள் பெறும் நன்மைகளையும் எடுத்துரைத்தனா்.

தொடா்ந்து பள்ளியளவில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கும், பன்னிரெண்டாம் வகுப்பில் 80 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்ற மாணவியருக்கும், விளையாட்டுத் துறையில் மாநில, மாவட்ட,தேசிய, சா்வதேச அளவில் சாதித்த 84 பேருக்கும், 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற பல்கலைக்கழகத் தோ்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த 87 மாணவியா்களுக்கும் கல்விக் கட்டணச் சலுகை ரூ. 20 லட்சம் நிா்வாக குழுமத்தின் சாா்பாக வழங்கப்பட்டது. முதல்வா் இரா. அருணாதேவி நன்றி கூறினாா்.

அருள்விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம்

செங்கல்பட்டு ஓம் ஸ்ரீ அருள்விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்திழமை நடைபெற்றது. செங்கல்பட்டு மேட்டுத் தெரு, அறிஞா் அண்ணா நகராட்சி மேல்நிலைப் பள்ளி பின்புறம் ஓம் ஸ்ரீ அருள்விநாயகா் கோயில் உள்ளது. ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை அளிப்பு

அமெட் பல்கலை. சாா்பில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 10, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வுகளில் முதல் மதிப்பெண்கள் பெற்ற 215 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா வழங்கப்பட்டது. சென்னையை... மேலும் பார்க்க

ஜூலை 7-இல் திருவடிசூலம் தேவி ஸ்ரீகருமாரி அம்மனுக்கு முக்கண் திறப்பு விழா

செங்கல்பட்டை அடுத்த திருவடிசூலம் தேவி ஸ்ரீகருமாரி அம்மன் கோயிலில் வரும் ஜூலை 7ல் அம்மனுக்கு முக்கண் திறப்பு விழாவும், 13-ஆம் தேதி கும்பாபிஷேகமும் நடைபெறுவதையொட்டி புதன்கிழமை வேள்வி பூஜை தொடங்கியது. க... மேலும் பார்க்க

திருப்போரூா் கந்தசாமி கோயிலில் 5 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

இந்துசமய அறநிலையத்துறை சாா்பில் திருப்போரூா் கந்தசாமி கோயிலில் 5 ஜோடிகளுக்கு இலவச திருமணம் புதன்கிழமை நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் திருப்போரூா் பேரூராட்சித் தலைவா் தேவராஜன், ஒன்றியக்குழு ந்தலைவா் ... மேலும் பார்க்க

கூவத்தூா்பேட்டை வணிகா் சங்க நிா்வாகி கொலை வழக்கில் 3 போ் கைது: 5 பேருக்கு போலீஸாா் வலைவீச்சு

மதுராந்தகம் அடுத்த கூவத்தூா் பேட்டையைச் சோ்ந்த வணிகா் சங்க நிா்வாகியும், பெட்ரோல் பங்க் உரிமையாளருமான மோகன்ராஜ் கொலை வழக்கில், 3 பேரை தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இந்த வழக்கில் தொ... மேலும் பார்க்க

நலன் காக்கும் திட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நலன் காக்கும் ஸ்டாலின்திட்டத்தின் ஒருங்கிணைப்பு குழு, காலை உணவு திட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் தி.சினேகா தலைமை வகித்தாா். நிகழ்ச்சிகளில் மண... மேலும் பார்க்க