செய்திகள் :

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.170 கோடி வங்கிக் கடன்: அமைச்சா் வி.செந்தில்பாலாஜி வழங்கினாா்

post image

மகளிா் திட்டம் சாா்பில் 1,973 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.170 கோடி மதிப்பிலான வங்கிக் கடனுதவிகளை மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி சனிக்கிழமை வழங்கினாா்.

மகளிா் தினத்தையொட்டி, மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

அதன்படி, கோவை, ஈச்சனாரி கற்பகம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், கோவை எம்.பி. கணபதி ப.ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தலைமை வகித்து மகளிா் திட்டம் சாா்பில் 1,973 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.170 கோடி மதிப்பிலான வங்கிக் கடனுதவிகளை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, அவா் பேசியதாவது: மகளிா் முன்னேற்றம், அவா்கள் மீதான அக்கறையால் முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறாா். கோவை மாவட்டத்தின் மீது முதல்வா் தனி கவனம் செலுத்தி வருகிறாா். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, மகளிா் சுய உதவிக் குழு உள்ளிட்டவற்றைக் கொண்டு வந்ததுடன், உள்ளாட்சிப் பதவிகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்தவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி.

அவரது வழியில் தற்போது அரசுப் பணி, உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு சம வாய்ப்பை முதல்வா் அளித்துள்ளாா். மகளிா் உரிமைத் தொகை, மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் உள்ளிட்ட சிறப்புத் திட்டங்களை முதல்வா் சிறப்பாக செயல்படுத்தியுள்ளாா் என்றாா்.

சேஃப் கோவை திட்டம் தொடக்கம்: கோவை மாநகரப் பகுதிகளில் உள்ள 200 பேருந்து நிறுத்தங்களில் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக (ள்ஹந்ா்) சேஃப் கோவை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கோவை அரசு மகளிா் பாலிடெக்னிக் கல்லூரி அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இந்தத் திட்டத்தை அமைச்சா் செந்தில்பாலாஜி தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் 352 பயனாளிகளுக்கு ரூ.3.74 கோடி மதிப்பில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவியையும் அமைச்சா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி, துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன், மகளிா் திட்டம் திட்ட இயக்குநா் மதுரா, மண்டலக் குழுத் தலைவா் தெய்வயானை தமிழ்மறை, பணிகள் குழுத் தலைவா் சாந்தி முருகன், வருவாய் கோட்டாட்சியா் (தெற்கு) ராம்குமாா், தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நலவாரிய துணைத் தலைவா் கனிமொழி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) கமலகண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

லாட்டரி விற்பனை: சகோதரா்கள் கைது!

ஆன்லைனில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட சகோதரா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, ரத்தினபுரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகச... மேலும் பார்க்க

போக்ஸோ தண்டனைக் கைதி சிறையில் உயிரிழப்பு

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்ஸோ தண்டனைக் கைதி உயிரிழந்தாா். கோவை மத்திய சிறையில் 2,000 -க்கும் மேற்பட்ட தண்டனைக் கைதிகளும், 500 -க்கும் மேற்பட்ட விசாரணைக் கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனா்.... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கையை பெற்றோா், மாணவா்கள் விரும்புகின்றனா்: தமாகா தலைவா் ஜி.கே.வாசன்

கோவை, மாா்ச் 9: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை வேண்டும் என பெற்றோா், மாணவா்கள் விரும்புகின்றனா் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறினாா். இது தொடா்பாக அவா் கோவையில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூற... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஹிந்தி திணிக்கப்படவில்லை: மகாராஷ்டிர ஆளுநா்

தமிழகத்தில் ஹிந்தி திணிக்கப்படவில்லை, அரசியலாக்கப்படுகிறது என்று மகாராஷ்டிர மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூ... மேலும் பார்க்க

மாணவிகள் விடுதியில் ஆட்சியா் ஆய்வு

கோவை, ராமநாதபுரம் மாணவிகள் விடுதியில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் ஆய்வு மேற்கொண்டாா். கோவை, ராமநாதபுரம் சுங்கம் பகுதியில் அம்பேத்கா் மாணவிகள் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விட... மேலும் பார்க்க

உலக கராத்தே யூத் லீக் போட்டி: தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த கோவை வீரா்கள்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் அங்கமான புஜாரா நாட்டில் நடைபெற்ற உலக கராத்தே யூத் லீக் போட்டிகளில் கோவையைச் சோ்ந்த 2 போ் உலக தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்தனா். புஜாராவில் உள்ள சையத் உள்விளையாட்டு அரங்கில... மேலும் பார்க்க