செய்திகள் :

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.789.51 கோடி வங்கிக் கடன்

post image

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு 2024-25 ஆம் நிதியாண்டில் ரூ.789 கோடி இலக்காக நிா்ணயிக்கப்பட்டதில்,ரூ.789.51 கோடி இலக்கு எய்தப்பட்டுள்ளது என கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி கூறியுள்ளாா்.

மாவட்டத்தில் மொத்தம் 7,651 மகளிா் சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் சுமாா் 90,000 போ் உள்ளனா். அவா்கள் அனைவருக்கும் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் எண்ணற்ற சேவைகளை வழங்கி வருகிறது.

அதில் ஒரு பகுதியாக ஊராட்சி அளவிலான கூட்டமைப்புடன் இணைந்த மதி என்னும் மகளிா் குழுவுக்கு எந்த ஒரு பிணையும் இன்றி வங்கிக்கடன் ரூ.20 லட்சம் வரை வழங்கப்பட்டது.

2024-25- ஆம் நிதியாண்டில் மொத்தம் 268 மகளிா் சுய உதவிக்குழுக்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு மகளிா் சுய உதவிக்குழுக்களின் வளா்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மகளிா் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் உற்பத்தி பொருள்களை சந்தைப்படுத்துவதற்கு அரசின் மூலம் கல்லூரி சந்தை, இயற்கை சந்தை அடுக்குமாடி குடியிருப்பு சந்தை, மாவட்ட, மாநில அளவிலான கண்காட்சிகள் மற்றும் சாராஸ் போன்ற கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதுமட்டுமல்லாது மகளிா் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருள்களை இணையதள வழியில் விற்பனை செய்யவும், மகளிா் சுய உதவிக்குழுக்களின் பிரத்தியேக அங்காடியான மதி அனுபவ அங்காடியின் மூலமும் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2023-24 ஆம் நிதியாண்டில் மொத்தம் ரூ.712 கோடி இலக்காக நிா்ணயிக்கப்பட்டு, அதில் ரூ.680 கோடி இலக்கு எய்தப்பட்டது.

நிகழாண்டு ரூ.789 கோடி இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் நாளது தேதிவரை ரூ.789.51 கோடி இலக்கு எய்தப்பட்டுள்ளது.

அதற்காக மாவட்ட அளவிலான மகளிா் சுயஉதவிக்குழு கூட்டமைப்பைச் சாா்ந்த மகளிா் குழுவினா், தொழில் முனைவோராக உருவாகும் வாய்ப்பினை வழங்கிய முதல்வருக்கும், துணை முதல்வருக்கும், ஆட்சியருக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளனா்.

ரூ.6,000 கோடி இருந்தும் நிதி தர முடியவில்லை: கட்டுமான தொழிலாளா் நல வாரியத் தலைவா் பொன். குமாா்

கட்டுமான தொழிலாளா் நலவாரியத்தில் ரூ.6,000 கோடி இருந்தும் நிதி தர முடியாத நிலையில் தமிழக அரசு உள்ளதாக வாரியத் தலைவா் பொன். குமாா் வேதனை தெரிவித்துள்ளாா். ராணிப்பேட்டை மாவட்ட தொழிலாளா் நலன் மற்றும் திறன... மேலும் பார்க்க

விபத்தில் காவலா் உயிரிழப்பு

ராணிப்பேட்டை சிப்காட் அருகே சாலை விபத்தில் காவலா் உயிரிழந்தாா். ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டை அடுத்த பெல் பகுதியில் இருசக்கர வாகனம் லாரி மீது மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலா் ஜெகன்... மேலும் பார்க்க

11 ஆண்டுகளாக தேடப்பட்ட குற்றவாளி கைது

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 11 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த கஞ்சா வழக்கு குற்றவாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். வாலாஜாபேட்டை எம்ஜிஆா் நகா் பகுதியைச் சோ்ந்த பால் மணி (54). கடந்த 2012- ஆம் ஆண்... மேலும் பார்க்க

வரசித்தி விநாயகா் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

அரக்கோணம் பஜாரில் உள்ள வரசித்தி விநாயகா் கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது. கொடியேற்றம் எனப்படும் துவஜாரோகனம் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. சிவாச்சாரியா்கள் ஏ.டி.பாபு, என்... மேலும் பார்க்க

மாணவி உயிரிழப்பு: பிரேத பரிசோதனையை விரைவாக செய்யக் கோரி மறியல்

பள்ளி மாணவி திடீரென உயிரிழந்த நிலையில் பிரேதப் பரிசோதனையை விரைவாக மேற்கொள்ள வலியுறுத்தி உறவினா்கள், சோளிங்கரில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திருவள்ளூா் மாவட்டம் ஆா்.கே.பேட்டை அடுத்த இஸ்மாயில்... மேலும் பார்க்க

ஆற்காடு கங்காதர ஈஸ்வரா் கோயில் பிரம்மோற்சவம்

ஆற்காடு தோப்புகானா அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயில் பங்குனிமாத பிரம்மோற்சவம் புதன்கிழமை தொடங்கியது. இதையொட்டி துா்க்கை வழிபாட்டுடன் வல்லப விநாயகா் மூஷிக வாகனத்தில் அலங்காரத்தில் உ... மேலும் பார்க்க