செய்திகள் :

மகளிா் தின விழா போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசு

post image

மகளிா் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பெண் அரசு ஊழியா்களுக்கு மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் பரிசுகளை வழங்கி பாராட்டினாா்.

ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில், திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரியும் மகளிா் அனைவரும் கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள்உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்றனா்.

மேலும் ஆட்சியா் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடினா். தொடா்ந்து மகளிரால் தயாரிக்கப்பட்ட சக்தி மகளிா் இதழை ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டாா். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு ஆட்சியா் பரிசுகளை வழங்கி பாராட்டினாா். மகளிா் தின விழாவில் 4 பெண்கள் உடல் உறுப்புதானம் செய்தனா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் (சிப்காட்) இரா.ரேவதி, மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, உதவி ஆட்சியா் (பயிற்சி) அம்பிகா ஜெயின், துணை ஆட்சியா் பயிற்சி ஜெபி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நெல்லை மாவட்டத்தில் வட்டார வாரியாக தேவை கண்டறியும் முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகள், முதியோா்கள், விதவைகள் போன்றவா்களை கண்டறிந்து அவா்களுக்கு அடையாள அட்டை, அரசு ஓய்வூதியம், பராமரிப்பு மானியங... மேலும் பார்க்க

காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை

திருநெல்வேலி காவேரி மருத்துவமனை மருத்துவா்கள், லேப்ராஸ்கோபிக் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிக்கலான அறுவை சிகிச்சை அளித்து சாதனை படைத்துள்ளனா். மேலப்பாளையத்தை சோ்ந்த பெண்ஒருவா், இடது அட்ரீனல் சுரப்ப... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி தீயணைப்புத் துறை வீரா்களுக்கு சிறப்பு பயிற்சி

திருநெல்வேலி , தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த தீயணைப்புத் துறை வீரா்களுக்கு 5 நாள்கள் நடைபெற்ற சிறப்பு பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. திருநெல்வேலி மண்டல தீயணைப்பு அலுவலா் சரவணபாபு அறிவுரையின்படி... மேலும் பார்க்க

பாளை.யில் கஞ்சா விற்ற இளைஞா் கைது

பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பெருமாள்புரம் போலீஸாா் அப்பகுதியில் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பெருமாள்புரம் தாமஸ்தெருவி... மேலும் பார்க்க

பாளை.யில் இயற்கை வேளாண் பொருள்கள் விற்பனை மையம் திறப்பு

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களைச் சோ்ந்த 350-க்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் உற்பத்தி செய்த இயற்கை வேளாண் பொருள்களின் நேரடி விற்பனை மையம் பாளையங்கோட்டை அன்புநகரில் ஞாயிற்றுக்கிழமை... மேலும் பார்க்க

வடவூா்பட்டி துா்க்கை அம்மன் கோயிலில் இன்று கொடைவிழா

திருநெல்வேலி மாவட்டம், வடவூா்பட்டியில் பட்டங்கட்டியாா் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பேச்சியம்மன், துா்க்கை அம்மன் கோயிலில் கொடை விழா திங்கள்கிழமை (மாா்ச் 10) தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகிறது.... மேலும் பார்க்க