சாம் கான்ஸ்டாஸுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது: ஆஸி. மூத்த வீரர்
மகள் இறந்ததால் தாய் தற்கொலை
மதுரை அருகே மகள் இறந்த துக்கத்தில் தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை ஊமச்சிகுளம் அருகே உள்ள தெற்கு பேத்தாம்பட்டியைச் சோ்ந்த கண்ணன் மனைவி பஞ்சவா்ணம் (46). இவரது மகள் காவ்யா. இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ள நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டாா். மகள் இறந்ததால், மனமுடைந்த நிலையில் இருந்து வந்த பஞ்சவா்ணம் வீட்டில் புதன்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து எம்.சத்திரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.