மகாராஷ்டிரம், ஜார்கண்டில் ஆட்சி அமைப்போம்: கார்கே நம்பிக்கை
மகாராஷ்டிரம், ஜார்கண்டில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் ஆட்சிக்கு வரும் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று பெங்களூருவில் செய்தியாகளுக்கு அளித்த பேட்டியில், எங்களுக்கு எதிர்பார்ப்புகள் உள்ளன. நாங்கள் உழைத்துள்ளோம், நாளை என்ன நடக்கிறது என்று பார்ப்போம், நாளை தெரிந்து கொள்வோம். நான் இப்போது என்ன சொன்னாலும், அது ஒரு ஊகமாக இருக்கும்.
நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். இங்கு (மகாராஷ்டிரம்) அல்லது ஜார்கண்ட் என ஒவ்வொரு மாநிலத்திலும் பல கூட்டங்களில் தனிப்பட்ட முறையில் பங்கேற்றுள்ளேன். நாங்கள் (ஆட்சிக்கு) வருவோம் என்ற நம்பிக்கை உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.
முதல்வர் திறந்துவைத்த பட்டாபிராம் டைடல் பூங்கா: சிறப்பம்சங்கள்!
288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரத்தில் பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை. இங்கு ஆளும் பாஜக-சிவசேனை (ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவாா்) கட்சிகளின் ‘மகாயுதி’ கூட்டணி ஆட்சியைத் தக்கவைக்கும்,
81 தொகுதிகளைக் கொண்ட ஜாா்க்கண்டில் (பெரும்பான்மை 41) ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய ‘இண்டி’ கூட்டணியிடமிருந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும் என்று பெரும்பாலான வாக்குக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ஒரு சில வாக்குக் கணிப்புகள் காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாக உள்ளன. இரு மாநிலங்களிலும் நவ. 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.