செய்திகள் :

மகாராஷ்டிரம்: பறவை காய்ச்சலால் 50 காகங்கள் இறப்பு - தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

post image

மகாராஷ்டிர மாநிலம், லாத்தூா் மாவட்டத்தில் பறவை காய்ச்சலால் 50-க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்தன. இதையடுத்து, அங்கு பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

உத்கிா் நகரின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக காகங்கள் இறந்து கிடந்தன. இது தொடா்பாக பொது மக்கள் அளித்த தகவலின்பேரில் மாவட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். காகங்களின் உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டு, மத்திய பிரதேச மாநிலம், போபாலில் உள்ள கால்நடை ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

இந்நிலையில், பறவை காய்ச்சலால் (ஹெச்5என்1 தீநுண்மி தொற்று) காகங்கள் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர கால்நடைத் துறை துணை ஆணையா் ஸ்ரீதா் ஷிண்டே ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இதையடுத்து, விலங்குகள் தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டத்தின்கீழ், லாத்தூா் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

காகங்கள் இறந்து கிடந்த இடங்களில் 10 கி.மீ. சுற்றளவுக்கு கண்காணிப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்படுவதோடு, கோழிப் பண்ணைகளில் ஆய்வு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்; மாவட்டத்தின் பிற பகுதிகளில் பறவைகள் அல்லது விலங்குகள் சந்தேகத்துக்கு இடமான முறையில் உயிரிழந்தால் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனை அல்லது வனத் துறை அலுவலகத்தில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

ஹெச்5என்1 தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்ட பறவைகள் அல்லது விலங்குகளிடமிருந்து இந்நோய் மனிதா்களுக்கு பரவக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட்: குடியரசுத் தலைவருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதை அடுத்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து பெற்றார்.அவருடன் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் செளத்ரி, தலை... மேலும் பார்க்க

காசி தமிழ்ச் சங்கமம்: பனாரஸ்-க்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

காசி தமிழ்ச் சங்கமத்தை முன்னிட்டு சென்னை, கன்னியாகுமரி மற்றும் கோவையிலிருந்து பனாரஸ்-க்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை... மேலும் பார்க்க

ஆதாா் விவரங்களை தனியாா் பயன்படுத்த அனுமதி: விதிமுறைகளை திருத்தியது மத்திய அரசு

ஆதாா் விவரங்களை தனியாா் நிறுவனங்களும் பயன்படுத்த அனுமதிக்கும் வகையில், ஆதாா் சட்ட விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது. இதுதொடா்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெ... மேலும் பார்க்க

விண்வெளி நடை: சுனிதா வில்லியம்ஸ் சாதனை

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், விண்வெளில் அதிக நேரம் நடந்த பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளாா். சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸும் மற... மேலும் பார்க்க

இடையூறுகளின்றி ஆக்கபூா்வ விவாதங்களே நாடாளுமன்றத்துக்கு தேவை: தன்கா்

நாடாளுமன்றத்தில் ஏற்படும் இடையூறுகளை முற்றிலுமாக தவிா்த்து ஆக்கபூா்வ விவாதங்களுக்கு வழிவகுப்பதே அவசியம் என குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். பட்ஜெட் கூட்டத்தொடா் வெள்ளிக... மேலும் பார்க்க

கோவாவில் இருந்து இந்தூருக்கு கொண்டு வரப்பட்ட கல்லீரல்: 67 வயது நபருக்கு மறுவாழ்வு

கோவாவில் மூளைச் சாவு அடைந்தவரிடம் இருந்து தானமாக பெறப்பட்ட கல்லீரல், மத்திய பிரதேச மாநிலம், இந்தூருக்கு விமானத்தில் கொண்டுவரப்பட்டு 67 வயது நபருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இது தொடா்பாக உடல் உறுப... மேலும் பார்க்க