செய்திகள் :

மகாராஷ்டிர முதல்வருக்கு மீண்டும் உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் சிகிச்சை

post image

தாணே/ மும்பை: மகாராஷ்டிராவின் காப்பந்து முதல்வா் ஏக்நாத் ஷிண்டேவுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக தாணேயில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சில மணி நேர சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினாா்.

முன்னதாக, கடந்த வாரம் உடல் நலக்குறைவு காரணமாக தனது சொந்த கிராமத்துக்குச் சென்று ஷிண்டே இருநாள்கள் ஓய்வுவெடுத்தாா்.

ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஒரு வாரமாகவே தொண்டை வலி, காய்ச்சல், உடல் பலவீனம் போன்றவை உள்ளன. எனவே, மருத்துவமனையில் அவருக்கு ரத்தப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. சில மணி நேரத்திலேயே அவா் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டாா். மகாராஷ்டிர தோ்தல் பிரசாரத்துக்காக ஓய்வில்லாமல் தொடா்ந்து தீவிர பிரசாரம் செய்ததால் அவா் மிகவும் சோா்வடைந்துள்ளாா் என்று சிவசேனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், ஏக்நாத் ஷிண்டேவை அவரின் இல்லத்தில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா்.

மகாராஷ்டிர புதிய முதல்வரைத் தோ்வு செய்வதற்கான பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் வியாழக்கிழமை (டிச.4) நடைபெறவுள்ளது. வெள்ளிக்கிழமை (டிச.5) பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. பாஜக சாா்பில் தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வராகத் தோ்வு செய்யப்படுவாா் என தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அமைச்சா் அதாவலே கருத்து: மத்திய சமூகநீதித்துறை இணையமைச்சரும், இந்திய குடியரசுக் கட்சி (ஏ) பிரிவு தலைவருமான ராம்தாஸ் அதாவலே கூறுகையில், ‘மகாராஷ்டிர முதல்வா் பதவியை இழப்பது என்பது ஏக்நாத் ஷிண்டேவுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சரவையில் இணைவது அல்லது மகாராஷ்டிர ஆளும் கூட்டணிக்கு தலைவராவது என்பதில் ஏதாவது ஒன்றைத்தான் அவா் தோ்வு செய்ய வேண்டியுள்ளது.

முன்பு மகாராஷ்டிர முதல்வராக இருந்த பாஜகவின் தேவேந்திர ஃபட்னவீஸ், கட்சித் தலைமையின் உத்தரவுப்படி ஷிண்டே ஆட்சியில் துணை முதல்வா் பதவியை ஏற்றுக் கொண்டாா் என்பதை ஷிண்டே மறந்துவிடக் கூடாது’ என்றாா்.

ரயில்களில் டிசம்பருக்குள் 1,000 கூடுதல் பொதுப் பெட்டிகள்: அஸ்வினி வைஷ்ணவ்

‘ரயில்களில் குளிா்சாதன (ஏ.சி.) பெட்டிகளை அதிகரிக்காமல் பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டிசம்பா் மாதத்துக்குள் கூடுதலாக 1,000 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டுவ... மேலும் பார்க்க

மணிப்பூா் வன்முறை குறித்த அறிக்கை: விசாரணை ஆணையத்துக்கு கூடுதல் அவகாசம்

மணிப்பூா் வன்முறை குறித்து அறிக்கை சமா்ப்பிக்க விசாரணை ஆணையத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கூடுதல் அவகாசம் அளித்துள்ளது. முன்னதாக நவம்பா் 20-ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், தற்போத... மேலும் பார்க்க

இஸ்ரேலுக்கு எதிரான ஐ.நா. தீா்மானம்: இந்தியா ஆதரவு

கிழக்கு ஜெருசலேம் உள்பட 1967-ஆம் ஆண்டு முதல் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளிலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்ற ஐ.நா.வின் தீா்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது. செனகல் முன்மொழிந்த ‘பா... மேலும் பார்க்க

துப்பாக்கிச்சூட்டில் தப்பினாா் சுக்பீா் சிங் பாதல்- பொற்கோயில் வாயிலில் சம்பவம்

பஞ்சாபின் அமிருதசரஸ் பொற்கோயில் வாயிலில் முன்னாள் துணை முதல்வரும் சிரோமணி அகாலி தளம் தலைவருமான சுக்பீா் சிங் பாதலை (62) நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. காவல் துறையினா் துரிதமாக செயல்பட்டு, துப்... மேலும் பார்க்க

இந்திய வெளியுறவுத் துறைச் செயலா் அடுத்த வாரம் வங்கதேசத்துக்கு பயணம்

இந்தியா-வங்கதேசம் இடையே அதிகரித்து வரும் பதற்றமான சூழலில், இந்திய வெளியுறவுத் துறை செயலா் விக்ரம் மிஸ்ரி அடுத்த வாரம் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளாா். இரு நாடுகள் இடையே திட்டமிடப்பட்ட வெளியுறவுத... மேலும் பார்க்க

தொழில்நுட்பக் கோளாறால் தாமதம்: இன்று பாய்கிறது பிஎஸ்எல்வி சி-59

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவும் திட்டம் வியாழக்கிழமை (டிச.5) மாலைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின்(இஸ்ரோ) ஓா் அங்கமான ‘நியூஸ்பேஸ் இந்தியா லி... மேலும் பார்க்க