செய்திகள் :

மகா கும்பமேளாவில் இந்துக்கள் அல்லாதோர் கடை வைக்கத் தடை!

post image

மகா கும்பமேளாவையொட்டி பிரயாக்ராஜில் இந்துக்கள் அல்லாதோர் கடை வைக்கத் தடை விதிக்க வேண்டும் என்று துறவிகள் கூறியுள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை நதிக்கரையில் வெகு சிறப்பாக நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி ஜனவரி 13 ஆம் தேதி தொடங்குகிறது. நாடு முழுவதுமிருந்து லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மகா கும்பமேளாவை மிகச் சிறப்பாக நடத்தும் வகையில், மேளா காவல்துறையினர், தகுதியான காவல்துறையினரைத் தேடிவருகிறார்கள்.

இந்நிலையில் மகா கும்பமேளாவில் இந்துக்கள் அல்லாதோர் கடை வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அகில பாரதிய அகாரா பரிஷத் தலைவர் மஹந்த் ரவீந்திர புரி கூறியுள்ளார்.

'கும்பமேளாவின்போது பிரயாக்ராஜ் சுத்தமாகவும், தெய்வீகமாகவும், அமைதியானதாகவும் இருக்க வேண்டும், அதன் பாதுகாப்பு மற்றும் புனிதத்தைப் பாதுகாக்க இந்துக்கள் அல்லாதவர்களை விலக்கி வைக்க வேண்டும்.

டீக்கடைகள், பழச்சாறு கடைகள், பூக்கடைகள் ஆகியவற்றை அமைக்க இந்துக்கள் அல்லாதோருக்கு அனுமதி வழங்கக்கூடாது. அவர்களுக்கு கொடுத்தால் அவர்கள் அங்கே துப்புவார்கள், சிறுநீர் கழிப்பார்கள்' என்று கூறியுள்ளார்.

அகில பாரதிய அகாரா பரிஷத்தின் இந்த முடிவுக்கு அகில இந்திய முஸ்லீம் ஜமாத் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

எச்எம்பிவி வைரஸ் பாதிப்புக்கும் சீனாவுக்கும் தொடர்பில்லையா? சுகாதாரத் துறை

சீனாவில், மனிதர்களைத் தாக்கும் மெடாநியூமோவைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாகத் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இந்தியாவில் இரண்டு குழந்தைகளுக்கு இந்த எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட... மேலும் பார்க்க

சண்டீகரில் அடுக்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது

சண்டீகரில் பாதுகாப்பற்றதாக அறிவிக்கப்பட்ட அடுக்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது. சண்டீகரின் செக்டார்-17ல் பாதுகாப்பற்றதாக அறிவிக்கப்பட்ட அடுக்கு மாடிக் கட்டடம் திங்கள்கிழமை காலை இடிந்து விழுந்தது. ... மேலும் பார்க்க

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு எச்எம்பிவி தொற்று!

பெங்களூருவைச் சேர்ந்த 3 மாத பெண் குழந்தை மற்றும் 8 மாத ஆண்டு குழந்தைக்கு எச்எம்பிவி தொற்று உள்ளதாக ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

திரிபுராவில் பிப்ரவரிக்குள் மின்சார ரயில்கள் இயக்கப்படும்!

வடகிழக்கு மாநிலத்தில் முக்கிய மின்மயமாக்கல் திட்டம் நிறைவடைந்துள்ள நிலையில், வரும் பிப்ரவரி மாதத்து‘க்குள் திரிபுராவில் மின்சாரம் மூலம் இயங்கும் ரயில்கள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மா... மேலும் பார்க்க

பாட்னாவில் பிரசாந்த் கிஷோர் கைது

பாட்னாவில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கைது செய்யப்பட்டுள்ளார். திங்கள்கிழமை அதிகாலை அவர் கைது செய்யப்பட்டதாக உயர் அதிகாரி ஒருவர் தெர... மேலும் பார்க்க

எந்த குடும்பத்திடமும் சிக்காத ஒரே தேசிய கட்சி பாஜக: மகாராஷ்டிர முதல்வா் ஃபட்னவீஸ்

எந்த ஒரு தனிப்பட்ட குடும்பத்துக்கும் சொந்தமாகாமல், தொண்டா்களால் இயக்கப்படும் ஒரே தேசிய கட்சி பாஜக மட்டுமே என்று மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா். நாகபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க