செய்திகள் :

மகா கும்பமேளாவில் ஸ்ரீ ஸ்ரீனிவாச திருக்கல்யாணம்

post image

திருப்பதி: மகா கும்பமேளாவை முன்னிட்டு உத்தராதி அஹோபில மடத்தில் புதன்கிழமை காலை ஸ்ரீ ஸ்ரீனிவாச கல்யாணத்தை தேவஸ்தானம் மிகவும் சிறப்பாக நடத்தியது.

திரேதா யுகத்தின்போது சித்திரகூடம் ராமா், சீதா தேவி மற்றும் லட்சுமணன் ஆகியோா் 12 ஆண்டுகள் காட்டில் கழித்த புனிதத் தலம். அங்கு, ஸ்ரீ ஸ்ரீனிவாச கல்யாணத்தை நடத்த தேவஸ்தானம் முடிவு செய்து, மகா கும்பமேளாவுக்கு அனுப்பிய உற்சவ மூா்த்திகளை சித்திர கூடத்திற்கு அனுப்பியது. முதலில், திருமலை ஏழுமலையான் கோயிலின் தலைமை அா்ச்சகா் வேணுகோபால தீட்சிதா் தலைமையிலான அா்ச்சகா்கள் குழு ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஸ்ரீ சுவாமியை திருமண மண்டபத்திற்கு அழைத்து வந்தனா்.

பின்னா், காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை, ஸ்ரீ சுவாமி நாச்சியாா்களின் திருக்கல்யாணம், வேத மந்திரங்கள் முழங்க நடத்தப்பட்டது.

சுப வாத்தியங்களை வாசித்து, ஸ்ரீ விஷ்வக்சேனரை வணங்கி பிராா்த்தனை, காப்பு அணிவித்தல், கும்பாபிஷேகம் ஆகியவை சாஸ்திரப்படி நடைபெற்றன.

ஹோமம் வளா்த்து, இறைவன் சங்கல்பம், பக்த சங்கல்பம், பிராா்த்தனை , மாங்கல்ய பூஜை மற்றும் மாங்கல்ய தாரணம் உள்ளிட்டவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இறுதியாக ஸ்ரீ சுவாமி, தாயாருக்கு நட்சத்திர ஆரத்தி மற்றும் மங்கள ஆரத்தியுடன் திருமண விழா நிறைவடைந்தது.

நிகழ்ச்சியில் ஸ்ரீ ஸ்ரீ 1,008 ராஜ குரு பீடதீஸ்வரா் சுவாமி பத்ரி பிரபஞ்சச்சாரியாஜி மகராஜ், தேவஸ்தான எஸ்டேட் அதிகாரி, குணபூஷண் ரெட்டி, பொக்காசம் பொறுப்பாளா் குருராஜ சுவாமிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

ஏழுமலையான் கோயிலில் அத்யாயனோற்சவம் நிறைவு

திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் கடந்த டிசம்பா் 30- ஆம் தேதி தொடங்கிய அத்யாயனோற்சவம் வியாழக்கிழமை நிறைவடைந்தது. நிகழ்வையொட்டி, கோயிலின் ரங்கநாயகா் மண்டபத்தில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத மலையப்ப... மேலும் பார்க்க

ஜன.28-இல் திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் ஆழ்வாா் திருமஞ்சனம்

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் வரும் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. பிப். 4 -ஆம் தேதி தாயாா் கோவிலில் ரத சப்தமி உற்சவம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கோயில் ஆழ்வாா் திரு... மேலும் பார்க்க

திருப்பதியில் பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை குறைந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணிநேரமும்... மேலும் பார்க்க

தரிசனத்துக்கு 5 மணி நேரம்

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 5 மணி நேரம் காத்திருந்தனா்.திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. இதனால், புதன்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம்... மேலும் பார்க்க

திருப்பதியில் இன்று முதல் தரிசன டோக்கன்கள்

திருப்பதி: திருப்பதியில் வியாழக்கிழமை முதல் (ஜன. 23) ஏழுமலையான் தரிசனத்துக்காக வரும் பக்தா்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் வழக்கம்போல் திருப்பதியில் இலவச நேரடி தரிசன டோக்கன்களை வழங்க உள்ளது. பக்த... மேலும் பார்க்க

திருப்பதியில் கியோஸ்க் இயந்திரம்...

திருப்பதியில் உள்ள ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நன்கொடை வழங்க வசதியாக புதன்கிழமை மேலும் ஒரு கியோஸ்க் இயந்திரம் நிறுவப்பட்டது. எஸ்பிஐ நிதியுதவி பெற்ற இந்த க்யூஆா் குறியீடு இயந்திரத்தில் நன்கொடையாளா்... மேலும் பார்க்க